தவான் உண்டு.. சூர்யா இல்லை.. 2023 உலக கோப்பைக்கான மாஸான இந்திய அணி.. வாசிம் ஜாஃபர் தேர்ந்தெடுப்பு!

0
3641

இந்த வருடம் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த உலகக் கோப்பை போட்டி முழுவதுமாக இந்தியாவில் வைத்து நடைபெறுகிறது. மேலும் இந்திய அணி கடைசியாக உலகக்கோப்பையை வென்று 12 ஆண்டுகள் ஆகிறது.

இதனால் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியை இந்தியா நிச்சயமாக வெல்லும் என்று எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களும் இந்திய அணி எப்படி இருக்க வேண்டும் தங்களது வியூகங்களையும் கணிப்புகளையும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் வாசிம் ஜாபர் உலகக்கோப்பையில் இந்த வீரர்கள் ஆட வேண்டும் என தனது அணியை தேர்வு செய்து இருக்கிறார். இந்த வீரர்கள் உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றால் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சமநிலை சிறப்பாக இருக்கும் என தெரிவித்த அவர் தனது உத்தேச உலகக் கோப்பை விளையாடும் இந்திய அணியை தேர்வு செய்து இருக்கிறார்.

இவர் தேர்ந்தெடுத்து இருக்கும் அணியில் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இடம் பெற்றுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் விராட் கோலி நான்காவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஐந்தாவது இடத்தில் கே.எல் ராகுலை தேர்ந்தெடுத்து இருக்கிறார். மேலும் அவரே இந்தியாவின் விக்கெட் கீப்பராகவும் செயல்படுவார் என தனது அணியில் தெரிவித்துள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து ஆறாவது இடத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஏழாவது இடத்தில் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தேர்வு செய்துள்ளார். எட்டாவது இடத்தில் மற்றொரு ஆல் ரவுண்டரான அக்சர் பட்டேலை தேர்வு செய்து இருக்கிறார். ஒன்பதாவது இடத்தில் மற்றொரு சுழற் பந்து வீச்சாளராக குல்தீப் யாதவை தேர்வு செய்து இருக்கிறார் வாசிம் ஜாஃபர்.

- Advertisement -

முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகிய இரண்டு பந்துவீச்சாளர்களையும் தனது அணியில் தேர்வு செய்து இருக்கிறார். முகமது சிராஜ் அல்லது முகமது சமி இருவரில் ஒரு வேகப்பந்துவீச்சாளர் அணியில் இடம் பெறலாம் என தெரிவித்திருக்கும் அவர் தற்போதைய ஒரு நாள் போட்டியின் பார்ம் அடிப்படையில் முகமது சிராஜ் விளையாடுவதில் சரியாக இருக்கும் என கூறியிருக்கிறார். மேலும் இவரது அணியில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான தவானை மாற்று தொடக்க ஆட்டக்காரராக தேர்வு செய்து இருக்கிறார். நீண்ட காலமாகவே தவான் இந்திய ஒரு நாள் அணியில் இடம் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக அவர் 2022 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் தான் விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.