சென்னை அணிக்கு எதிராக எந்த ஒரு வீரரும் படைக்காத சாதனையை நிகழ்த்தியுள்ள ஷிக்கர் தவான்

0
64
Shikhar Dhawan

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 38வது ஆட்டத்தில், மும்பையின் வான்கடே மைதானத்தில், சென்னை அணியும், பஞ்சாப் அணியும் தற்போது மோதி வருகின்றன. பிளே-ஆப்ஸ் வாய்ப்பில் தொடர்ந்திருப்பதற்கு இரு அணிகளுக்குமே இது முக்கியமான ஆட்டம்.

பஞ்சாப் அணி ஏழு ஆட்டங்களில் மூன்றில் வென்று ஆறு புள்ளிகளோடு புள்ளிபட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறது. சென்னை அணி ஏழு ஆட்டங்களில் இரண்டை வென்று நான்கு புள்ளிகளோடு புள்ளிபட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. பஞ்சாப் அணியில் எல்லீஸ், வைபவ், ஷாரூக்கான் நீக்கப்பட்டு, சந்தீப் சர்மா, ராஜபக்சே, ரிஷி தவான் சேர்த்தப்பட்டிருக்கிறது. சென்னை அணியில் எந்த மாற்றமும் இல்லை.

டாஸில் வென்ற சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, பவர்-ப்ளேவின் கடைசி ஓவரில், பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான மயங்க் அகர்வாலை தீக்சனா வெளியேற்றினார். ஆனால் அதற்கடுத்து வந்த ராஜபக்சேவோடு சேர்ந்து தவான் சென்னை அணியை நயமாகப் புரட்டியெடுத்து விட்டார். மெதுவாக ஆரம்பித்து போகப்போக வேகம் காட்டி பஞ்சாப் அணியின் ஸ்கோரை, இறுதிவரை ஆட்டமிழக்காமல் 88 [59] அடித்து 187 ரன்களுக்கு உயர்த்தினார்.

இதன் மூலம் ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் ஐ.பி.எல்-ல் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார். சென்னை அணிக்கு எதிராக முதலில் 1000 ரன்களை அடித்தவர் என்ற சாதனையும் தவான் வசம் வந்திருக்கிறது.

ஷிகர் தவான் – சென்னை – 1029
ரோகித் ஷர்மா – கொல்கத்தா – 1018
டேவிட் வார்னர் – டெல்லி – 1005
டேவிட் வார்னர் – கொல்கத்தா – 976
விராட் கோலி – சென்னை – 949

ஐ.பி.எல்-ல் 6000 ரன்கள் அடித்த இரண்டாவது வீரராகவும், அதிக ரன் அடித்தவர்களில் இரண்டாவது வீரராகவும் ஷிகர் தவான் இணைந்திருக்கிறார்

விராட் கோலி – 6402 – 207
ஷிகர் தவான் – 6000 – 198
ரோகித் சர்மா – 5764 – 216
டேவிட் வார்னர் – 5668 – 155
சுரேஷ் ரெய்னா – 5528 – 200