டெக்சா ஸ்கேன் என்றால் என்ன? இந்திய அணியில் நடைமுறைபடுத்தப்படும் புதிய முறை

0
1261

இந்திய அணியில் இடம்பெற வேண்டுமென்றால், இனி யோயோ டெஸ்ட் மற்றும் டெக்ஸா ஸ்கேன் பரிசோதனையில் வெற்றி பெற்றால் மட்டுமே அது நடக்கும். நேற்று மும்பையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கிரிக்கெட் வீரர்கள் அடிக்கடி காயம் ஏற்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் இதனை எப்படி தடுப்பது என்னென்ன முறையை கடைப்பிடிப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

விராட் கோலி கேப்டனாக இருந்தபோது இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்றால் யோ யோ டெஸ்டில் வெற்றி பெற வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. ஆனால் கொரோனா காலத்திற்குப் பிறகு அந்த நடைமுறை தளர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் கொண்டு வரப்படும் என பி சி சி ஐ அறிவித்துள்ளது. யோ யோ டெஸ்ட் என்றால் 20 மீட்டர் உள்ள தூரத்தை வீரர்கள் ஓடி பிறகு 5 வினாடிகள் ஓய்வெடுத்துக் கொண்டு பின்னர் பீப் சத்தம் கேட்கும் போது வேகத்தை அதிகரித்து ஓட வேண்டும்.

இதில் 16.1 முதல் பதினாறு புள்ளி ஐந்து என்று ஸ்கோரை அடையும் வீரர்கள் உடல் தகுதியில் வெற்றி பெற்று விட்டார்கள் என்று அறிவிக்கப்படுவார்கள். இந்த நிலையில் தற்போது புதிதாக டெக்ஸா பரிசோதனை நடத்தப்பட உள்ளது. டெக்சா என்பது வீரர்களுக்கு நடத்தப்படும் அதி நவீன  ஸ்கேன் சோதனையாகும். இதன் மூலம் வீரர்களின் கொழுப்பு சத்து எலும்பின் அடர்த்தி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ரிப்போர்ட் எடுக்கப்படும். இதில் எலும்பின் அடர்த்தி ,நீர் சத்து, அம்சங்கள் குறைவாக இருந்தால் அதற்கு என தனி பயிற்சி வழங்கப்படும்.

இந்த டெக்சா பரிசோதனை மூலம் வீரர்கள் யாரும் காயத்துடன் விளையாடினால் அது கண்டுபிடிக்கப்பட்டு அதனை சரி செய்ய தொடர்ந்து பயிற்சி வழங்கப்படும்.இந்த இரண்டு முறையும் தீவிரமாக பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு முறையினால் ரோகித் சர்மா, அஸ்வின், புஜாரா, பும்ரா போன்ற சீனியர்கள் தோல்வி அடைய அதிக வாய்ப்பு உள்ளது.