இந்திய கிரிக்கெட்

என் ஐபிஎல் ஆரம்பத்துல கேஎல் ராகுல் ஒரு அட்வைஸ் சொன்னார்.. ஆனா நான் அத செய்யாம மாட்டிக்கிட்டேன் – பிரிவிஸ் பேட்டி

தன்னுடைய ஐபிஎல் ஆரம்பத்தில் இந்திய வீரர் கேஎல்.ராகுல் கூறிய அறிவுரையை தான் பின்பற்றவில்லை என டிவால்ட் பிரிவிஸ் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

கடந்த ஆண்டு சிஎஸ்கே இணைந்தவர் இந்த ஆண்டு காயத்தின் காரணமாக முதல் மூன்று போட்டிகளில் விளையாடவில்லை. இந்த நிலையில் நாளை டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் களம் இறங்குகிறார் என்று கூறப்படுகிறது.

அவர் சொன்னதைக் கேட்கவில்லை

இந்த நிலையில் மீண்டும் களம் திரும்ப இருக்கும் டிவால்ட் பிரிவிஸ் ரவிச்சந்திரன் அஸ்வின் யூடியூப் சேனலில் பல விஷயங்கள் குறித்து பேட்டி அளித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும்போது “என்னுடைய ஐபிஎல் முதல் போட்டியில் கேஎல் ராகுல் என்னிடம் “உனக்கு நீ உண்மையாக இரு” என்று கூறினார். ஆனால் நான் என்ன செய்தேன், களத்திற்கு சென்று என்னுடைய இயல்பில் இல்லாமல் விளையாடினேன். ஆனால் அது ஒரு அழகிய பயணமாக மாறியது; அது ஒரு அனுபவமாக இருந்தது”

- Advertisement -

இங்குதான் உருவானேன்

“மும்பை இந்தியன்ஸ் அணியில் கழித்த மூன்று ஆண்டுகள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. என்னை உருவாக்கியது. அந்த காலகட்டம் எனக்கு மிகவும் முக்கியமானது. நான் என்னவாக போகிறேன் என்பது அங்கு தான் தீர்மானமானது. சச்சின், ஜெயவர்த்தனே, ரோகித் சர்மா ஆகியோருடன் பணியாற்றியது விலை மதிப்பற்றது”

இதையும் படிங்க : முகில் சவுத்திரிய வாங்க ஆரம்பத்துல போட்டி போட்டது யார் தெரியுமா?.. இனி உலக கிரிக்கெட் மாறப் போகுது – அஸ்வின் பேட்டி

“சிஎஸ்கே அணிக்காக விளையாட பிளமிங் என்னை தொடர்பு கொண்டது எனக்கு வரமாக அமைந்தது. அந்த முடிவை எடுப்பது எனக்கு எளிதாக இருந்தது. என்னுடைய பயணத்தில் இது ஒரு முக்கிய படியாக அமைந்தது. என்னுடைய இளம் வயதில் நான் வெளியில் அமர்ந்திருந்தேன். நீங்கள் உருவாவதற்கு களத்தில் இறங்கி விளையாட வேண்டும். அந்த வாய்ப்பை சிஎஸ்கே கொடுத்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by