சென்னை சூப்பர் கிங்ஸ் பயோ பபுளில் இருந்து டெவோன் கான்வே வெளியேறியதற்கு இதுதான் காரணம் – மீண்டும் எப்போது வருவார் ?

0
425
Devon Conway

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு தென்ஆப்பிரிக்கா வீரர் டு பிளிசிஸ்சை தக்க வைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவரை தக்க வைத்துக் கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி நடந்து முடிந்த மெகா ஏலத்திலும் சென்னை அணி அவரை கைப்பற்ற முயற்சி செய்யவில்லை.

அவரது இடத்தில் சென்னை அணியில் ஓபனிங் விளையாட நியூசிலாந்து அணியை சேர்ந்த டேவான் கான்வேயை சென்னை அணி நிர்வாகம் குறிவைத்து கைப்பற்றியது. நியூசிலாந்து அணியை சேர்ந்த டேவான் கான்வேயை ஒரு கோடி ரூபாய்க்கு சென்னை அணி நிர்வாகம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நியூசிலாந்து அணைக்காக 20 டி20 போட்டிகளில் விளையாடி 602 ரன்கள் குவித்திருக்கிறார். டி20 போட்டிகளில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 50.17 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 139.35 ஆகும்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே டேவான் கான்வேக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஒரு போட்டியில் (கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில்) அவர் 3 ரன்கள் மட்டுமே குவித்திருந்தார். அதன் பின்னர் எந்த போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

சென்னை அணியில் இருந்து வெளியேறும் டேவான் கான்வே

டேவான் கான்வேக்கு தென்னாபிரிக்காவில் திருமணம் நடைபெற இருப்பதால் தற்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயோ பபுளில் இருந்து வெளியேறியுள்ளார். தன்னுடைய திருமணத்தை தென்ஆப்பிரிக்காவில் முடித்த பின்னர் ஏப்ரல் 24-ஆம் தேதியன்று மீண்டும் சென்னை அணியின் பயோ பபுளில் கான்வே இணைந்து கொள்வார் என்று தற்பொழுது தகவல் உறுதியாகியுள்ளது.

- Advertisement -

திருமணம் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு சென்று மீண்டும் திரும்ப இருக்கும் டேவான் கான்வே அடுத்த இரண்டு போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட மாட்டார் என்றும் தெரியவந்துள்ளது.

சென்னை அணிக்கு அடுத்த போட்டி நாளை மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக நடைபெற இருக்கின்றது. அதன் பின்னர் வருகிற 25-ஆம் தேதி அன்று பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு வேலை டேவான் கான்வேக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால், மே ஒன்றாம் தேதி ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கான்வே களமிறங்கி வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.