இந்த வருடம் நடக்க இருக்கும் ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாக 10 அணிகளும் வீரர்களை வெளியே விட்டு இருக்கிறார்கள். இதற்குப் பிறகு ஒவ்வொரு அணியின் கையிலும் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்க்கலாம்.
அடுத்த வருடம் 2026 ஐபிஎல் தொடருக்கு முன்பாக இந்த வருடம் ஐபிஎல் மினி ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு தாங்கள் கழட்டிவிடும் வீரர்களை அறிவிக்க இதுவே கடைசி நாளாக இருந்தது. இந்த நிலையில் 10 அணிகளும் வெளியே விடும் வீரர்களின் பெயர்களை அறிவித்திருக்கிறது.
இந்த முறை நடைபெற இருக்கும் ஐபிஎல் மினி ஏலத்திற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 63.30 கோடி ரூபாயோடு வர இருக்கிறது. இது இந்த முறை ஒரு அணியின் மிக அதிகபட்ச தொகையாக அமைந்திருக்கிறது. வெங்கடேஷ் ஐயர் ஆண்ட்ரே ரசல் போன்ற பெரிய விலை கொடுத்து வாங்கிய வீரர்களை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெளியே விட்டது.
இதற்கு அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு வராமல் கூட இருக்கலாம். அவர்களுக்கு ஏற்கனவே தேவையான அளவுக்கு வீரர்கள் இருக்கிறார்கள். மேலும் அவர்கள் கையில் மொத்தமாகவே 2.75 கோடி ரூபாய்தான் இருக்கிறது. இவர்கள்தான் இந்த முறை மிகவும் குறைந்த தொகையோடு ஏலத்திற்கு வர இருக்கிறார்கள்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அடுத்தபடியாக சிஎஸ்கே அணி 43.40 கோடி ரூபாயுடன் மினி ஏலத்திற்கு வர இருக்கிறது. இந்த முறை ஐபிஎல் மினி ஏலத்தில் இந்த இரு அணிகளுக்கும் இடையேதான் போட்டி மிகவும் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கேகேஆர் கையில் 63.30 கோடி.. ஆர்சிபி அட்டகாசமான ரிலீஸ்.. 2 அணிகள் கழட்டிவிட்ட வீரர்கள் விபரம்
2026 ஐபிஎல் ஏலத்திற்கு மீதமுள்ள பர்ஸ்
64.3 கோடி – கே.கே.ஆர்.
43.4 கோடி – சிஎஸ்கே
25.5 கோடி – சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
22.95 கோடி – எல்எஸ்ஜி
21.8 கோடி – டெல்லி கேப்பிட்டல்ஸ்
16.4 கோடி – ஆர்சிபி
16.05 கோடி – ராஜஸ்தான் ராயல்ஸ்
12.9 கோடி – குஜராத் டைட்டன்ஸ்
11.5 கோடி – பஞ்சாப் கிங்ஸ்
2.75 கோடி – மும்பை இந்தியன்ஸ்