2022 ஐபிஎல் தொடரில் பல்வேறு விருதுகளையும் மற்றும் பரிசுத்தொகைகளையும் வென்ற அணிகள் மற்றும் வீரர்கள் பட்டியல்

0
442

2022ஆம் ஆண்டு டாடா ஐபிஎல் தொடர் நேற்று சிறப்பாக நடந்து முடிந்தது. இறுதிப்போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மும்பை மற்றும் சென்னை அணிகள் இல்லாமல் ஒரு புதிய அணி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது வரவேற்கத்தக்கது.

ஐபிஎல் தொடரில் பரிசு வென்ற அணிகள் மற்றும் வீரர்கள் :

- Advertisement -

கோப்பையை வென்ற குஜராத் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. தொடரின் ஆரம்பம் முதல் இறுதி வரை அதிரடியாக விளையாடி முதல் ஐபிஎல் தொடரிலேயே அந்த அணி கோப்பையை வென்றுள்ளது.

2008-ம் ஆண்டுக்குப் பின்னர் இறுதி போட்டிக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரன்னர் அப் பட்டத்தை வென்றுள்ளது. அந்த அணிக்கு 12 கோடியே 50 லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரருக்கான விருது :

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய சஹால் பர்ப்பில் நிற தொப்பியை வென்றார் அவருக்குப் பரிசு தொகையை 10 இலட்ச ரூபாய் வழங்கப்பட்டது.

அதிக ரன்கள் குவித்த வீரருக்கான விருது :

அதேபோல நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக ஜோஸ் பட்டிலர் ஆரஞ்சு நிற தொப்பியை வென்றார் அவருக்கு பத்து லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

எமர்ஜிங் கிரிக்கெட் வீரர் விருது :

எமர்ஜிங் கிரிக்கெட் வீரர் விருதை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை சேர்ந்த உம்ரான் மாலிக் வென்றார் அவருக்கு பத்து லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

அதிக சிக்சர்கள் அடித்த வீரருக்கான விருது :

அதேபோல அதிக சிக்சர்கள் அடித்த வீரருக்கான விருதை ஜோஸ் பட்லர் வென்றார். அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் 45 சிக்சர் அடித்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு அவருக்கு பத்து லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

சூப்பர் ஸ்ட்ரைக்கர் ஆஃப் தி சீசன் :

சூப்பர் ஸ்ட்ரைக்கர் ஆஃப் தி சீசன் விருதை தினேஷ் கார்த்திக் வென்றார். இந்த விருதுடன் அவருக்கு டாட்டா பஞ்ச் கார் பரிசாக வழங்கப்பட்டது.

கேம் சேஞ்சர் ஆஃப் தி சீசன் :

நடப்பு ஐபிஎல் தொடரின் கேம் சேஞ்சருக்காண விருதை ஜோஸ் பட்லர் வென்றார். இந்த விருதுக்கு அவருக்கு பத்து லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

ஃபேர்பிளே விருது :

ஃபேர்பிளே விருதை ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இணைந்து சரிசமமாக பெற்றுக்கொண்டன.

அதிவேக பந்தை வீசிய வீரருக்கான விருது :

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேக பந்து வீசிய வீரருக்கான விருதை நியூசிலாந்து அணியை சேர்ந்த லோக்கி பெர்குசன் கைப்பற்றினார். அந்த விருதுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்பட்டது.

சிறந்த கேட்ச் ஆஃப் தி சீசன் விருது :

சிறந்த கேட்ச் ஆஃப் தி சீசன் விருதை எவின் லீவிஸ் வென்றார். இந்த விருதுக்கும் ரூபாய் 10 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.