டெல்லி தொடர்ந்து மூன்றாவது தோல்வி; ராஜஸ்தான் பட்லர் ஜெய்ஸ்வால் போல்ட் அபார ஆட்டம்!

0
91
Ipl2023

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகளுக்கு இடையே அசாம் மாநிலம் கௌகாத்தி மைதானத்தில் ஐபிஎல் 16 வது சீசனில் பதினொன்றாவது போட்டி நடைபெற்று முடிந்தது

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற டெல்லி அணியின் கேப்டன் வார்னர் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். ராஜஸ்தான் அணிக்கு துவக்கம் தர வந்த துவக்க ஆட்டக்காரர்கள் பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் டெல்லி பந்துவீச்சை மைதானத்தின் நாலா புறங்களிலும் சிதறடித்தார்கள்.

- Advertisement -

மிகச் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 31 பந்துகளில் 11 பவுண்டரி உடன் 60 ரன்களும், பட்லர் 51 பந்தில் ஒரு சிக்ஸர் மற்றும் 11 பவுண்டரி உடன் 79 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். கேப்டன் சஞ்சு சாம்சன் ரன் ஏதும் இல்லாமலும், ரியான் பராக் 7 ரன்னிலும் ஆட்டம் இழந்தார்கள். இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய ஹெட்மையர் 21 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 39 ரன்கள் எடுத்தும், துருவ் ஜுரல் மூன்று பந்தில் ஒரு சிக்ஸர் உடன் 8 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார்கள். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு ராஜஸ்தான் அணி 199 ரன்கள் சேர்த்தது.

இதற்கு அடுத்து களம் இறங்கிய டெல்லி அணிக்கு முதல் ஓவரிலேயே பிரிதிவி ஷா, மனிஷ் பாண்டே ஆகியோரது விக்கட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி டபுள் செக் வைத்தார் டிரென்ட் போல்ட். ரூசோவை 14 ரன்னில் வழி அனுப்பி வைத்தார் அஸ்வின்.

இதற்கடுத்து வார்னர் உடன் லலித் யாதவ் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். லலித் யாதவ் 38 ரன்னில் டிரெண்ட் போல்ட் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த அக்சர் படேல் மற்றும் ரோமன் பவல் இருவரும் தலா இரண்டு ரன்கள் வெளியேறினார்கள்.

- Advertisement -

நிலைத்து நின்று விளையாடிய வார்னர் 55 பந்தில் 66 ரன்கள் எடுத்து சகல் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த அன்றிச் நோர்க்கியா ரன் ஏதும் எடுக்காமல் சந்திப் சர்மா பந்தில் ஆட்டம் இழந்தார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 142 ரன்களை ஒன்பது விக்கட்டுகளை இழந்து எடுத்தது. 20 ஓவர் முடிவில் 57 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தனது மூன்றாவது ஆட்டத்தில் இரண்டாவது வெற்றியைப் பெற்றது. போல்ட் மற்றும் சாகல் இருவரும் சிறப்பாக பந்துவீசி தலா மூன்று விக்கட்டுகளை கைப்பற்றினார்கள்.