ரிஷப் பண்ட்காக நெகிழ வைக்கும் காரியத்தை செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம்!

0
157
Delhi

இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் டி20 தொடரின் 16வது சீசன் நேற்று அகமதாபாத் மைதானத்தில் குஜராத் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே கோலாகலமாக துவங்கியது!

இன்று பதினாறாவது ஐபிஎல் சீசனின் டபுள் ஹெட்டர் போட்டி நாளில் மதியம் நடந்த போட்டியில் பஞ்சாப் கொல்கத்தா அணிகள் மோதிக்கொண்டன. இந்தப் போட்டியில் மழை குறுக்கீடு காரணமாக டக்வர்த் லிவீஸ் விதிப்படி பஞ்சாப் அணி 7 ரன்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இதற்கு அடுத்து இரண்டாவது போட்டியாக தற்போது டெல்லி மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே ஆன போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் லக்னோ அணிக்காக இந்திய அணியின் முன்னாள் மூத்த வீரர் அமித் மிஸ்ரா, மேயர்ஸ் உட்பட நான்கு வீரர்கள் அந்த அணிக்காக அறிமுகமானார்கள். டெல்லி அணிக்காகவும் அமன் கான் போன்ற மூன்று புதிய வீரர்கள் டெல்லி அணிக்கு அறிமுகமானார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் சாலை விபத்தில் சிக்கி மோசமாக பாதிப்படைந்தார். இதை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வரும் அவர் தற்பொழுது ஓய்வில் இருக்கிறார்.

இந்த ஐபிஎல் சீசனில் ரிஷப் பண்ட் விளையாட முடியாத காரணத்தால், டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம், ரிஷப் பண்ட் அணியோடு இணைந்து இருப்பதாக காட்ட அவரது ஜெர்சியை போட்டி நடக்கும் மைதானத்தில் தங்கள் அணியினர் இருக்கும் இடத்தில் மாட்டிவிட்டு அவரது இருப்பை காட்டும் விதமான நெகிழ்ச்சியான சம்பவத்தை செய்திருக்கிறார்கள். இதற்கான புகைப்படம் பதிவின் முகப்பில் உள்ளது.

- Advertisement -

ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஏதாவது ஒரு விதத்தில் அணியினருடன் ரிஷப் பண்ட் தொடர்பில் இருக்குமாறு செய்ய வேண்டும் என்று கூறி வந்தார். தற்பொழுது இது அவரது எண்ணத்திலிருந்தே நடைபெற்று இருக்க வேண்டும்.
தற்பொழுது இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற டெலி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி11.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 100 ரண்களை எடுத்து இருக்கிறது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் கையில் மேயர்ஸ் அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் அரை சதம் அடித்து தற்பொழுது ஆட்டம் இழந்து இருக்கிறார்.