நடப்பு ஐபிஎல் தொடரில் 64ஆவது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி டெல்லி அருளண் ஜெய்ட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை டெல்லி அணி வென்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் அதிரடியில் கலக்கிய டெல்லி இளம் வீரர் ஜாக் பிரேசர் மெக்கர்க் ரன் ஏதும் இல்லாமல் ஆட்டம் இழந்தார். ஆனால் இன்னொரு துவக்க இந்திய இளம் ஆட்டக்காரர் அபிஷேக் போரல் 33 பந்தில் 58 ரன்கள் எடுத்தார்.
இதற்கு அடுத்து ஷாய் ஹோப் 27 பந்தில் 38 ரன்கள், ரிஷப் பண்ட் 23 பந்தில் 33 ரன்கள், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக 25 பந்தில் 57 ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் டெல்லி அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. லக்னோ தரப்பில் நவீன் உல் ஹக் இரண்டு விக்கெட் பற்றினார்.
இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய லக்னவாணிக்கு கே.எல்ராகுல், குயின்டன் டி காக், தீபக் ஹூடா, ஸ்டாய்னிஷ் என முக்கிய நான்கு விக்கெட்டை பவர் பிளேவில் 44 ரன்களுக்கு இழந்து விட்டது. இந்த முறை முன்கூட்டியே வந்த நிக்கோலஸ் பூரன் மட்டும் அதிரடியாக 27 பந்தில் 61 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில் கடைசி கட்டத்தில் வேகப் பந்துவீச்சாளர் அர்ஷத் கான் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் ஆட்டம் 58 ரன்கள் குவித்தார். லக்னோ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுக்க, டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் இஷாந்த் சர்மா மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
இதையும் படிங்க : டி20 உலக கோப்பை: சிஎஸ்கே கோச்சை வைத்து பாகிஸ்தான் அணி மாஸ் பிளான்.. பிளே ஆப் முன் விலகல்
இந்த போட்டியில் டெல்லி வென்றதின் காரணமாக, ரன் ரேட்டில் மிகக் கீழே இருக்கும் லக்னோ, மேலும் வெற்றி பெற்ற டெல்லி என இரண்டு அணிகளும் பிளே ஆப் வாய்ப்பிலிருந்து வெளியேறி விட்ட சோகம் நடந்திருக்கிறது. தற்பொழுது ஹைதராபாத், சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் இரண்டு இடங்களுக்கான ப்ளே ஆப் வாய்ப்பில் மோதிக் கொண்டிருக்கின்றன.