நேற்று பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தொடர் நாயகி விருது பெற்ற தீப்தி சர்மா, இந்திய உலகக் கோப்பை வெற்றி வரலாற்றில் இன்னொரு புதிய சாதனையையும் படைத்திருக்கிறார்.
2011ம் ஆண்டு இந்திய ஆண்கள் அணி சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்ற போது ஆல் ரவுண்டராக யுவராஜ் சிங் பெரிய பங்களிப்பை கொடுத்திருந்தார். மேலும் அவரே தொடர் நாயகன் விருதையும் வென்றார். அவர் கொடுத்த தாக்கத்திற்கு இணையாக தீப்தி சர்மா இப்பொழுது ஆல்ரவுண்டராக தாக்கத்தை கொடுத்திருக்கிறார்.
நேற்றைய போட்டியில் தீப்தி சர்மா கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார். 58 பந்துகளை சந்தித்து 58 ரன்கள் எடுத்திருந்தார். ஸ்மிருதி மந்தனாவுக்கு அடுத்து ஒரே இடதுகை வீராங்கனையாக இருந்ததால் இவர் மிடில் ஓவர்களில் நின்று விளையாடுவது மிக அவசியமாக இருந்தது. இந்த நிலையில் அவர் கடைசி பந்து வரை விளையாடி அணியை காப்பாற்றினார்.
மேலும் நேற்றைய போட்டியில் மொத்தம் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார். மிகக் குறிப்பாக தென் ஆப்பிரிக்க கேப்டன் விக்கெட் இதில் அடங்கும். இந்திய அணியை வீழ்த்தக்கூடிய திறமை படைத்த அனைத்து தென் ஆப்பிரிக்க விக்கெட்டும் இவரது கையில் வந்தது. இந்த நிலையில் 22 விக்கெட் மற்றும் 200க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்து தொடர் நாயகியாக விருதை வென்றிருக்கிறார்.
இந்திய அணி ஐசிசி கோப்பைகளை வென்ற தொடர்களில் அதிக விக்கெட் எடுத்த பிளேயராக தீப்தி சர்மா சாதனை படைத்திருக்கிறார். இந்த வகையில் 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற பொழுது ஜாகீர் கான் 21 விக்கெட் எடுத்திருந்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது. தற்போது இதை தீப்தி சர்மா முறியடித்திருக்கிறார்.
இதையும் படிங்க : அணிக்குள் வந்த 6வது நாளில் கையில் உலகக் கோப்பை.. கடவுள் நல்லது செய்ய அனுப்பி வைத்தார் – செபாலி வர்மா பேட்டி
இந்தியா ஐசிசி கோப்பையை வென்ற போது அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் :
1983 – ரோஜர் பின்னி (18, WC)
2002 – ஜாகீர் கான் (8, CT)
2007 – ஆர்.பி. சிங் (12, டி20 உலகக் கோப்பை)
2011 – ஜாகீர் கான் (21, WC)
2013-ஆர் ஜடேஜா (12, CT)
2024-அர்ஷ்தீப் (17, டி20 உலகக் கோப்பை)
2025-வருண்/ஷாமி (9, CT)
2025 – தீப்தி (22, WC)