மன்னித்து விட்ட தீபக் சஹர்; வீடியோ இணைப்பு!

0
550
Deepak

மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட இந்தியா வந்துள்ள தென்ஆப்பிரிக்கா அணியுடன், டி20 தொடரின் கடைசி மற்றும் 3-வது போட்டியில் இன்று இந்தூர் மைதானத்தில் இந்திய அணி தற்போது மோதி வருகிறது!

இந்தப் போட்டியில் இந்திய அணியில் விராட் கோலி, கேஎல் ராகுல், அர்ஸ்தீப் சிங் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஸ்ரேயாஸ் அய்யர், முகமது சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் உள்ளே வந்திருந்தனர். இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

போட்டி நடைபெறும் மைதானம் அளவில் சிறியது அதேபோல் ஆடுகளமும் பேட்டிங்க்கு சாதகமானது. ஆனால் இப்படியான நிலையிலும் வழக்கம்போல தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் சீக்கிரத்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஆனால் அதற்கடுத்து ஜோடி சேர்ந்த இடதுகை வீரர்கள் குயின்டன் டி காக் மற்றும் ரூஸோவ் இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை நொறுக்கித் தள்ளிவிட்டார்கள். குயின்டன் டி காக் 43 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

ஆனால் ஒரு முனையில் நின்ற ரூஸோவ் கடந்த இரு போட்டிகளிலும் ரன் அடிக்காததிற்கும் சேர்த்து இந்த ஆட்டத்தில் அடித்து விளாசினார். 48 பந்துகளைச் சந்தித்த அவர் 8 சிக்ஸர் 7 பவுண்டரிகளுடன் சதமடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். கடைசியில் வந்த கில்லர் மில்லர் தன் பங்கிற்கு கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் அடித்து அமர்க்களப்படுத்தினார். 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 227 ரன்கள் குவித்தது.

இந்தப்போட்டியில் ஆட்டத்தின் 16வது ஓவரை தீபக் சஹர் வீசினார். அப்போது பந்துவீச்சாளர் முனையில் நின்ற இளம் வீரர் ஸ்டப்ஸ், தீபக் சஹர் பந்துவீசும் முன் கிரீசில் இருந்து வெளியேறி சென்று விட்டார். சுதாரித்து நின்ற தீபக் சஹர் அவரை ரன் அவுட் செய்யாமல் எச்சரிக்கை மட்டும் செய்துவிட்டு போய்விட்டார். இந்த முறையில் பந்துவீச்சாளர்கள் செய்வது சமீபத்தில் மிகவும் சர்ச்சையான ஒன்றாக விவாதமாக கிரிக்கெட் வட்டாரத்தில் உருமாறி வந்திருக்கிறது. இந்த நிலையில் தீபக் சஹர் இப்படி இரண்டு செய்யாமல் கடந்து வந்திருக்கிறார். காண வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!