கிரிக்கெட்

தீபக் ஹூடா அதிரடி சதம் : அயர்லாந்து அணியை துவம்சம் செய்த சாம்சன் – ஹூடா ஜோடி ; டி20ஐ கிரிக்கெட்டில் வரலாற்றுச் சாதனை

இந்திய அணி இரு அணிகளாகப் பிரிந்து ரோகித் சர்மா தலைமையிலான ஒரு அணி இங்கிலாந்திற்கு மூன்று வடிவ கிரிக்கெட் போட்டி தொடர்களில் விளையாடவும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மற்றொரு அணி அயர்லாந்திற்கு இரு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவும் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

- Advertisement -

இந்தத் தொடரின் முதல் போட்டி டப்ளின் மைதானத்தில் கடந்த 26ஆம் தேதி நடந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் உம்ரான் மாலிக் முதல் வாய்ப்பு பெற்றார். மழையால் 12 ஓவர்களாக நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 108 ரன்கள் அடிக்க, இந்திய அணி 9.2 ஓவரில் வெற்றிக்கரமாக சேஸ் செய்து, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

இந்த நிலையில் இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி டப்ளின் மைதானத்திலேயே துவங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கை தேர்வு செய்தார். காயத்தால் பாதிக்கப்பட்ட ருதுராஜிற்குப் பதிலாக சஞ்சு சாம்சன் இடம்பெற்றார்.

இதன்படி சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷான் துவக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினார்கள். ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் இஷான் கிஷானை அயர்லாந்து வீழ்த்த, அத்தோடு அவர்கள் மகிழ்வதற்கான தருணங்கள் பந்துவீச்சில் முடிந்துவிட்டது. அதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா ஜோடி அயர்லாந்து பந்துவீச்சை நாலாபுறத்திலும் சிதைக்க ஆரம்பிக்கவிட்டது.

- Advertisement -

இருவரும் ஆரம்பத்தில் அதிரடியாக ஆடினாலும் போகப்போக தீபக் ஹூடாவின் ஆட்டத்தில் அனல் பறந்தது. ஒருபுறம் சஞ்சு சாம்சன் தேவைக்கு பவுண்டரி ஆடி சிறப்பான ஒத்துழைப்பை தந்தார். இருவருமே அரைசதம் கடக்க, இதில் தீபக் ஹூடா தனது அரைசதத்தைத் சதமாக மாற்றினார். 55 பந்துகளில் எட்டு பவுண்டரி, ஆறு சிக்ஸர்களோடு சதமடித்த தீபக் ஹூடா 57 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சனும் 42 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 227 ரன்கள் குவித்தது.

தீபக் ஹூடா – சஞ்ச சாம்சன் ஜோடி 177 பார்ட்னர்ஷிப் அமைத்து, டி20 போட்டிகளில் இந்தியாவின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்களை பதிவு செய்தனர். டி20 போட்டிகளில் இந்தியாவின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்:

தீபக் ஹூடா – சஞ்சு சாம்சன் – 177 ரன்கள்
கே.எல்.ராகுல் – ஷிகர் தவான் – 165 ரன்கள்
ஷிகர் தவான் – ரோகித் சர்மா – 160 ரன்கள்
ஷிகர் தவான் – ரோகித் சர்மா – 148 ரன்கள்
கே.எல்.ராகுல் – ரோகித் சர்மா – 140 ரன்கள்

டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதமடித்த இந்திய வீரர்கள்

35 பந்து – ரோகித் சர்மா – இலங்கை
46 பந்து – கே.எல்.ராகுல் – வெஸ்ட் இன்டீஸ்
53 பந்து – கே.எல்.ராகுல் – இங்கிலாந்து
55 பந்து – தீபக் ஹூடா – அயர்லாந்து
56 பந்து – ரோகித் சர்மா – இங்கிலாந்து

Published by