கிரிக்கெட்

“அடி பிலிவர் அடி” ஹசரங்கா விக்கெட்டை வீழ்த்திய பின்பு டான்ஸ் மோடுக்கு சென்ற தீபக் சஹார்

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது இதன் இரண்டாவது போட்டியில் நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது இப் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை அடைந்தது.

- Advertisement -

போட்டியில் இலங்கை அணி பேட்டிங் செய்யும் போது இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் ஹசரங்கா விக்கெட்டை அற்புதமான முறையில் தீபக் சஹர் வீழ்த்தினார். தொடக்கத்தில் முதல் 3 ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்து சற்று தடுமாறி வந்தார் அப்போது இலங்கை அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்து கொண்டே போனது . கேப்டன் சனாஹா விக்கெட்டை சஹல் வீழ்த்த களத்திற்குள் ஹசரங்கா உள்ளே வந்தார் . அவர் பேட்டிங்கில் இருக்கும் வரை அணியின் எண்ணிக்கை 300 ரன்களை எளிதாக கடந்து விடும் நின்ற நிலையில் இருந்தார்கள் இலங்கை அணி.

அப்போது 40வது ஓவரை வீசுவதற்காக கேப்டன் ஷிகர் தவான் தீபக் சஹாரை உள்ளே அழைத்து வந்தார். ஹசரங்கா மனநிலையிலேயே எளிதாக புரிந்து கொண்ட தீபக் சஹர் அவரை ஏமாற்றி முதல் பந்தை நக்கிள் பாலக வீச அதை எதிர்கொள்ள முடியாமல் போல்ட் ஆகி வெளியேறினார் ஹசரங்கா. தான் திட்டமிட்டது போல பந்து ஸ்டம்புகளை தாக்கியதும் ரொம்ப குஷியாகினார். தீபக் சஹர் ஹசரங்கா விக்கெட்டை வீழ்த்திய பிறகு மைதானத்தில் டான்ஸ் ஆடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இறுதியில் இலங்கை அணி 274 ரன்கள் குவித்தது . துணைக் கேப்டன் புவனேஷ்வர்குமார் மற்றும் சஹல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர் பின்னர் 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி படத்திலிருந்து விக்கெட்களை இழந்து தத்தளித்தது .இப்போட்டியில் இந்திய அணி வீரர் தீபக் சஹர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கலக்கி ஆல்ரவுண்டர் நட்சத்திரமாகத் திகழ்ந்தார். பந்துவீச்சில் 2 விக்கெட்டும் பேட்டிங்கில் ஆட்டமிழக்காமல் 62 ரன்கள் இப்போட்டியில் கலக்கினார். 193 தங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் துனைக்கேப்டன் புவனேஷ்வர்குமாருடன் கூட்டணி அமைத்தார் தீபக் சஹார் . 8வது விக்கெட்டுக்கு 84 ரன்களை சேர்த்தது இந்த ஜோடி இறுதியில் தீபக் சஹார் பவுண்டரி அடித்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றதுமட்டுமில்லாமல் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

- Advertisement -