தீபக் சஹர் மீண்டும் சென்னை அணிக்குத் திரும்பும் தேதி அறிவிப்பு – சந்தோஷத்தில் குதிக்கும் ரசிகர்கள்

0
110
Deepak Chahar CSK

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய இரண்டு போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது. அந்த அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்த பொழுதிலும் பந்துவீச்சு சுமாராகவே இருக்கின்றது. இரண்டு போட்டியிலும் அந்த அணி தோல்வி பெற முக்கிய காரணமாக பந்து வீச்சுதான் பார்க்கப்படுகிறது.

டுவைன் பிராவோ மட்டுமே இரண்டு போட்டியிலும் மிக சிறப்பாக பந்து வீசினார். மற்ற பந்துவீச்சாளர்கள் தொடர்ச்சியாக நல்ல ஓவர்களை வீசவில்லை. குறிப்பாக லக்னோ அணைக்கு எதிராக சென்னை அணி விளையாடிய இரண்டாவது போட்டியில் ஒரே ஓவரில் சிவம் துபே கொடுத்த 26 ரன்கள் சென்னை அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

- Advertisement -
சென்னை அணிக்கு தீபக் சஹர் ஆற்றிய பங்களிப்பு

கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னை அணியின் ஆஸ்தான இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளராக தீபக் சஹர் விளையாடி வந்தார்.2018 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பவர் பிளே மற்றும் டெத் ஓவர்களில் மிக அற்புதமாக பந்துவீசியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தமாக 58 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்.

சென்னை அணிக்காக மிக அற்புதமாக விளையாடி அவரை நடந்து முடிந்த மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீபக் சஹர் 14 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

பிப்ரவரி மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடந்த முடிந்த டி20 தொடரின் கடைசி போட்டியில் விளையாடிய அவருக்கு கால் தசையில் சிறிய பிளவு ஏற்பட்டுள்ளது. அந்த காயம் குணமடைய சில நாட்கள் தேவைப்படும் என்று அப்பொழுது மருத்துவ குழு தரப்பில் கூறப்பட்டு இருந்தது.

- Advertisement -
மீண்டும் சென்னை அணிக்கு களமிறங்கும் தீபக் சஹர்

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி தீபக் சஹர் விளையாட தயாராகி விட்டார் என்றும், வருகிற 25-ஆம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற இருக்கின்ற இடத்தில் அவர் களமிறங்குவார் என்றும் உறுதியாக கூறப்படுகின்றது.

மீண்டும் சென்னை அணிக்கு ஒரு சில நாட்களில் அவர் திரும்ப உள்ளதால் சென்னை அணி ரசிகர்கள் அனைவரும் தற்போது சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருக்கின்றனர்.