கிரிக்கெட்

காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து தீபக் சஹர் விலகல் – தீவிரமான காயம் குறித்து மருத்துவர்கள் அறிக்கை

நடந்து முடிந்த மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீபக் சஹர் 14 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். சென்னை அணிக்காக 2018 ஆம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையில் பவர் பிளே மற்றும் டெத் ஓவர்களில் மிக அற்புதமாக பந்துவீசி அசத்தினார்.

- Advertisement -

சமீபத்தில் நடந்து முடிந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் ஒரு நாள் போட்டியில் தீபக் சஹர் விளையாடினார். ஒரு போட்டியில் விளையாடிய ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். அதேபோல 3 டி20 போட்டியில் விளையாடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். கடைசி போட்டியான மூன்றாவது டி20 போட்டியில் விளையாடிய போது அவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது.

அதன் காரணமாகவே பாதியிலேயே ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். மருத்துவப் பரிசோதனை செய்து பார்க்கையில் அவருடைய கால் தசையில் சிறிய பிளவு ஏற்பட்டுள்ளது. அந்த காயம் குணமடைய சில நாட்கள் தேவைப்படும் என்று மருத்துவ குழு கூறியுள்ளது.

மீண்டும் ஐபிஎல் தொடரில் தீபக் சஹர் பங்கேற்பார்

அவருடைய காயம் குணமடைய சில நாட்கள் தேவைப்படும் என்கிற காரணத்தினால் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் இருந்து அவர் வெளியேறி உள்ளார்.

- Advertisement -

மார்ச் மாத இறுதியில் ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கும் நிலையில் இந்திய அணிக்கு அதற்கு முன் இலங்கை அணிக்கு எதிரான தொடர் மட்டுமே இருந்த நிலையில், அந்தத் தொடரிலிருந்து தீபக் சஹர் தற்பொழுது வெளியேறி உள்ளார். எனினும் நிச்சயமாக அவரது காயம் ஐபிஎல் தொடர் நடைபெறுவதற்கு முன்பாக குணமடைந்து விடும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

எனவே காயம் குணமடைந்து நேரடியாக அவர் ஐபிஎல் தொடரில் சென்னை அணி வீரர்களுடன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு மிக முக்கியமான வேகப்பந்து வீச்சாளராக தீபக் சஹர் பார்க்கப்படுகிறார். கூடிய விரைவில் குணமடைந்து சென்னை அணிக்கு முதல் போட்டியில் இருந்தே அவர் நன்றாக விளையாட வேண்டும் என்பதே அனைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் வேண்டுகோளாக தற்பொழுது உள்ளது.

Published by