ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ள தீபக் சாஹர் ; சமூக வலைத்தளத்தகல் உருக்கமான பதிவு

0
46
Deepak Chahar CSK

2018 முதல் கடந்த ஆண்டு வரை மொத்தமாக மூன்று ஆண்டுகளில் சென்னை அணியின் ஆஸ்தான இளம் வேகப்பந்து வீச்சாளராக தீபக் சஹர் விளையாடி வந்தார்.2018 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பவர் பிளே மற்றும் டெத் ஓவர்களில் மிக அற்புதமாக பந்து வீசி இருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தமாக 58 விக்கெட்டுகளை தீபக் சஹர் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை அணிக்காக மிக அற்புதமாக விளையாடி அவரை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீபக் சஹரை 14 கோடி ரூபாய்க்கு மீண்டும் கைப்பற்றியது.

பிப்ரவரி மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடந்த முடிந்த டி20 தொடரின் கடைசி போட்டியில் விளையாடிய அவருக்கு கால் தசையில் சிறிய பிளவு ஏற்பட்டுள்ளது. அந்த காயம் குணமடைய சில நாட்கள் தேவைப்படும் என்று அப்பொழுது மருத்துவ குழு தரப்பில் கூறப்பட்டு இருந்தது.

அதன் பின்னர் நீண்ட நாட்களாகவே தீபக் சஹர் ஐபிஎல் தொடர் பாதியில் சென்னை அணிக்கு விளையாட தொடங்குவார் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தீபக் சஹர் இந்தண்டு ஐபிஎல் தொடரில் விளையாட போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டு நிச்சயமாக பழைய பலத்துடன் களமிறங்குவேன்

தற்பொழுது வந்துள்ள அதிகாரப்பூர்வ செய்தியின் அடிப்படையில், தீபக் சஹர் இன்னும் நான்கு மாத காலங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாது என தெரியவந்துள்ளது. எனவே நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து அவர் வெளியேறி உள்ளார். இது சென்னை அணி ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் சென்னை ரசிகர்களுக்கு தீபக் சஹர் பிரத்தியேகமாக ஒரு ஸ்டோரியை பதிவிட்டுள்ளார்.”ரசிகர்கள் அனைவரும் என்னை மன்னிக்கவேண்டும் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி கொள்கிறேன். நிச்சயமாக மீண்டும் அதே பழைய பலத்துடன் இனி வரும் ஐபிஎல் தொடர்களில் களம் இறங்குவேன்.

என்னை இவ்வளவு நாட்கள் ஆதரித்து வந்ததற்கும், என் மீது நீங்கள் காட்டிய அக்கறை மற்றும் அன்புக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். உங்களுடைய பிரார்த்தனையை நான் எப்பொழுதும் எதிர்பார்க்கிறேன்”என்று கூறியுள்ளார்.