அதிர்ச்சி செய்தி : தீபக் சாஹர் காயம் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல் – சென்னை அணிக்கு மேலும் பின்னடைவு

0
76
Deepak Chahar CSK

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசன், மெகா ஏலத்தோட ஆரம்பிக்க, சென்னை அணி ஜடேஜா, தோனி, மொயீன் அலி, ருதுராஜை தக்க வைத்தது. சென்னை அணி ஏலங்களில் எந்தவொரு வீரருக்கும் தராத தொகைக்குப் போய் 15 கோடிக்கு தீபக் சாஹரை வாங்கியும் இருந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் வெஸ்ட் இன்டீஸ் அணி மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று 20/20 போட்டிகள் விளையாட இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்தது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், இந்தச் சுற்றுப்பயணத்தின் கடைசி 20/20 போட்டியில் காயமடைந்து தீபக் சாஹர் வெளியேறி இருந்தார்.

- Advertisement -

ஐ.பி.எல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே இந்தச் செய்தி சென்னை அணிக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் தொடரின் பாதியில் தீபக் சாஹர் காயத்திலிருந்து திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இருந்ததால், சென்னை அணி நம்பிக்கையோடு இருந்தது.

ஆனால் தற்போது சென்னை அணி நிர்வாகத்திற்கும், சென்னை அணி இரசிகர்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, தீபக் சாஹர் இந்த ஐ.பி.எல் தொடரிலிருந்து முழுதாய் வெளியேறுவதாக தகவல்கள் உறுதியாக வந்துகொண்டிருக்கின்றன.

சென்னை அணியில் தீபக் சாஹர் இல்லாத குறை பவர்-ப்ளேவின் போது தெளிவாகவே தெரிந்தது. சென்னை அணியும் ஐ.பி,எல் வரலாற்றில் எந்த சீசனிலும் இல்லாத அளவில், முதல் நான்கு தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது சென்னை அணி. இந்தச் சரிவிலிருந்து சென்னை மீண்டெழ என்ன செய்யப் போகிறதென்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

- Advertisement -