இந்த வருடம் நடக்க இருக்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில் தன்னை மீண்டும் சிஎஸ்கே அணி வாங்கும் என தீபக் சாஹர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
தற்போது சிஎஸ்கே அணியில் இடம் பெற்று இருக்கும் இந்திய வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் நடைபெற இருக்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி தன்னை வாங்கும் எனவும், இல்லையென்றால் இன்னொரு அணி தன்னை வாங்க வேண்டும் எனவும் விருப்பத்தை தெரிவித்திருக்கிறார்.
தோனியின் செல்லப்பிள்ளை தீபக் சாஹர்
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் மகேந்திர சிங் தோனிக்கு தீபக் சாஹர் நட்பு முறையில் மிகவும் விருப்பமானவராக இருக்கிறார். அணி பேருந்து பயணத்தில் இருந்து இவர் எப்பொழுதும் தோனி உடன் இருக்கக்கூடியவர். தோனி அதிகம் விளையாடும் பேசும் முக்கிய நபராக தீபக் சாஹர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதன் முதலில் சி எஸ் கே அணி 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் தீபக் சாஹரை 80 லட்சம் ரூபாய்க்கு வாங்கி இருந்தது. அடுத்த மெகா ஏலத்திற்கு முன்பாக அவரது செயல்பாடு மிகச் சிறப்பாக மாறியது. இதன் காரணமாக அவருடைய மதிப்பும் அதிகரித்தது. இருந்தபோதிலும் 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் அனைவரும் ஆச்சரியப்படும்படி 14 கோடி ரூபாய்க்கு தீபக் சாஹரை வாங்கியது.
என் மதிப்பு மிக அதிகம்
நடக்க இருக்கும் ஐபிஎல் மெகா ஏலம் குறித்து பேசி இருக்கும் தீபக் சாஹர் “கடந்த மெகா ஏலத்திற்கு முன்பாகவும் சிஎஸ்கே அணி என்னை தக்க வைக்கவில்லை. ஆனால் ஏலத்தில் எனக்காக போய் மீண்டும் அவர்கள் என்னை வாங்கினார்கள். இந்தஆண்டு எனக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை”
“ஆனால் இப்போது என்னுடைய மதிப்பு மிக அதிகமாக மாறிவிட்டது. காரணம் பவர் பிளேவில் 90 முதல் 100 ரன்கள் எடுக்கிறார்கள். இதனால்தான் அணிகள் அடிக்கடி 200 ரன்கள் தாண்டி எடுக்கின்றன. இதன் காரணமாக என்னைப் போன்ற பந்துவீச்சாளர்கள் தேவை”
இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் கில் பண்ட் கிடையாது.. இந்த இந்திய பையன்தான் எங்க ஆளுங்கள கவர்வாரு – டிம் பெய்ன் கணிப்பு
“இதனால் அவர்கள் என்னை மீண்டும் ஏலத்தில் எடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஒருவேளை சிஎஸ்கே அணி என்னை ஏலத்தில் எடுக்கவில்லை என்றால், என்னுடைய சொந்த மாநில அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி என்னை ஏலத்தில் எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.