அஷ்வின் பாணியில் மேன்கடிங் செய்ய வந்த தீபக் சஹர்; “யாரு சோசியல் மீடியால சிக்கி சின்னாபின்னமாகுறதுன்னு விட்டுட்டாரோ??” – ட்விட்டரில் கிண்டலடித்த ரசிகர்கள்!! வீடியோ உள்ளே..

0
144

அஷ்வின் பாணியில் மேன்கடிங் செய்த தீபக் சஹர், அதை நடுவரிடம் அவுட் கேட்காமல் கைவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, இப்போது வைரலாகி வருகிறது.

ஜிம்பாப்வே சென்று ஒருநாள் தொடரில் விளையாடிய இந்திய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. மூன்றாவது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 289 ரன்கள் அடித்திருந்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 130 ரன்கள் அடித்து அசத்தினார். இசான் கிசான் 50 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

290 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சற்று கடினமான இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணிக்கு துவக்க வீரர்களாக கைட்டானோ மற்றும் கையா இருவரும் களமிறங்கினர். கேட்டானோ பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது மறுமுனையில் கையா நின்று கொண்டிருந்தார். தீபக் சஹர் பந்துவீசிக்கொண்டிருக்கையில், பந்து கையை விட்டு செல்வதற்கு முன்பாக கையா கிரீசை விட்டு வெளியே வந்தார். இதை கண்ட தீபக் சஹர் மேன்கடிங் செய்தார். ஆனால் நடுவரிடம் அதற்கு அவுட் என்று கேட்கவில்லை. அமைதியாக சென்றுவிட்டார். இதன் வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த மேன்கடிங் முறை ஐபிஎல் தொடரின் போது ரவிச்சந்திரன் அஸ்வின் செய்த செயலால் பிரபலமானது. பல வருடங்களாக இந்த விதிமுறை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தாலும் யாரும் பெரிதாக பயன்படுத்துவதில்லை. அஸ்வின் செய்த பிறகு இவ்வளவு பெரிய சர்ச்சையானது. தீபக் சஹர் அதனை சரியாக செய்துவிட்டு அவுட் என்று கேட்காமல் சென்றதால், “சர்ச்சையில் எதற்கு சிக்க வேண்டும் என்று அப்படியே விட்டுவிட்டாரா? என சமூக வலைதளங்களில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

அதன் பிறகு தொடர்ந்து பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி இந்திய அணையின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு 276 ரன்கள் எடுத்திருந்தது. இறுதியில் இந்திய அணி கட்டுப்படுத்தியதால், 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

- Advertisement -