சிஎஸ்கே அணிக்காக விளையாடிய பிறகு இந்திய டி20 அணியில் அறிமுகமான 6 வீரர்கள்

0
144
Deepak Chahar CSK

இந்தியன் பீரிமியர் லீக் தொடரில் மிகவும் பிரபலமான அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியாகதான் இருக்கும் என்பதில் ஆச்சர்யமில்லை. நடைபெற்று முடிந்த பத்து ஐ.பி.எல் தொடர்களிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் நான்கு இடங்களுக்குள் இருந்து சாதனை படைத்துள்ளது. ஐ.பி.எல் வரலாற்றில் முதல் முறையாக அரபு ஐக்கிய நாடில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் ப்ளேஆப் விளையாடமுடியாமல் வெளியேறினார்கள். இருப்பினும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஐ.பி.எல்லில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரர்களில் அனுபவம் துடிப்பான இளம் வீரர்களின் பங்களிப்பும் பலமாக உள்ளது.மூத்த வீரர்களை அதிகம் விரும்பும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறு மிகச் சிறந்த வீரர்களை உருவாக்கிய இந்திய அணிக்கு கொடுத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடிய பிறகு இந்திய டி20 அறிமுகமான 6 நட்சத்திர வீரர்களை பற்றிய பார்ப்போம்

1.ரவிச்சந்திர அஸ்வின்

தற்போது டெல்லி கேப்பிடல் அணிக்காக விளையாடி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2009 முதல் 2015 வரை விளையாடி உள்ளார்

சென்னை அணிக்காக விளையாடும் பொழுது பலரது கவனத்தையும் பெற்ற அஸ்வின் பிறகு இந்திய அணியில் இடம் பிடித்தார். 97 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் இதுவரை 90 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது வாழ்க்கையை திருப்பி போட்ட ஆண்டாக 2010-ஆம் ஆண்டு இருந்தது. 2010ஆம் ஆண்டு 12 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் தன் வசம் ஆக்கினார் அந்த ஆண்டு சிறப்பாக செயல் பட்டதன் காரணமாக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாட வாய்ப்பு அஸ்வினுக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2.மோஹித் ஷர்மா

வலது கை வேகப்பந்து வீச்சாளரான மோஹித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டு விளையாடியுள்ளார் தனது முதல் ஐபிஎல் சீசனில் 15 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் பெற்றார்.இவர் சிறப்பாக செயல் பட்டதன் காரணமாக 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சர்வதேச டி20 அறிமுகமானார். கடந்த ஆண்டு டெல்லி கேப்பிடல் அணிக்காக விளையாடிய இவரை டெல்லி கேப்பிட்டல் அணி இந்த ஆண்டு அவரை கழட்டி விட்டது.

3. தீபக் சாஹர்

தீபக் 2016 ஆம் ஆண்டு ரைசிங் சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் அறிமுகமானார். 2016 மற்றும் 2017 ஆகிய இரண்டு தொடர்களிலும் சேர்த்து ஐந்து போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ளார் அவர் அந்த ஐந்து போட்டிகளில் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் 2018 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய தீபக் சஹரின் வாழ்க்கையை திருப்பி போட்டது.2018ஆம் ஆண்டு அவர் 12 போட்டிகளில் விளையாடிய அவர் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் சிறப்பாக செயல்பட்டு தான் காரணமாக இந்திய டி20 அணியில் இடம் கிடைத்தது. தீபக் சஹர் தனது முதலாவது சர்வதேச டி20 போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினார்.

4. சுப்பிரமணியம் பத்ரிநாத்

சுப்ரமணியம் பத்ரிநாத் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தடுப்புச் சுவர் என்று அழைக்கப்பட்டவர் எப்போதெல்லாம் மணி சரிவை நோக்கிச் செல்கிறதோ அப்போதெல்லாம் தனது சட்டத்தின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மீட்டுக் கொண்டு வருவார் 2011 ஆம் ஆண்டு 16 போட்டிகளில் விளையாடிய சுப்ரமணியம் பத்ரிநாத் 196 ரன்கள் எடுத்திருந்தார்.இப்படி சிறப்பாக செயல் பட்டதன் காரணமாக 2011 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது அவர் அந்த போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார் இருந்தும் அவரை அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

5. முரளி விஜய்


இந்திய அணியின் ஸ்டைலிஷ் ஓபனிங் பேட்ஸ்மேன் என்று கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் நிச்சயம் அதில் முரளிவிஜய் இருப்பார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2010ஆம் ஆண்டு விளையாடி முரளிவிஜய் 15 போட்டிகளில் 458 ரன்கள் சராசரி 35.23 என்ற கணன்க்கில் குவித்து அனைவரின் கவனத்தையும் தன் வசம் ஆக்கினார். இதன் காரணமாக அவரை ஐபிஎல்லில் அறிமுகமான அதே ஆண்டில் நடைபெற்ற ஐசிசி t20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

6. ருதுராஜ் கெய்க்வாட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சர்வதேச இந்திய அணியின் டி20 போட்டிகளில் அறிமுகமான கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் 2020 மற்றும் 2021 தொடர்களில் விளையாடி நான்கு போட்டிகளில் ஆட்டநாயகன் விருதுகளையும் வென்றுள்ளார்.
இலங்கை சுற்றுப்பயணம் மேற்க்கொண்ட இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இந்த தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய இவர் பெரிதாக ஜொலிக்கவில்லை.