உலகச் சாதனை படைத்த இளம் வீரர் ; வெற்றி முகத்தில் இந்தியா!

0
29004
zakir hassan

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியானது சட்டா கிராம் நகரில் நடைபெற்று வருகிறது . இதில் முதலில் ஆடிய இந்திய அணி 404 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு ஆடிய பங்களாதேஷ் அணி 150 நாட்களுக்கு ஆல் அவுட் ஆனது . தனது இரண்டாவது இன்னிசை ஆடிய இந்திய அணி 258 ரன்கள் எடுத்தது நிலையில் டிக்ளர் செய்தது இதன் மூலம் பங்களாதேஷ் அணிக்கு 513 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது .

இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடிய பங்களாதேஷ் அணி மூன்றாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் 46 ரண்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்தது. இதனைத் தொடர்ந்து நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கிய பங்களாதேஷ அணியின் துவக்க வீரர்கள் மிகச் சிறப்பாக ஆடினர் . சாண்டோ மற்றும் ஜாகிர் ஹசன் ஆகிய இருவரும் தங்களது அரை சதங்களை கடந்து சிறப்பாக ஆடினர் .

அணியின் எண்ணிக்கை 176 ஆக இருக்கும்போது சாண்டோ உமேஷ் யாதவ் பந்து வீச்சில் ரிஷப் பண்டிடம் கேட்ச் கொடுத்த ஆட்டம் இழந்தார் . இதனைத் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜாஹிர் ஹசன் தனது முதல் சதத்தை நிறைவு செய்தார் . இதுதான் அவரது அறிமுக போட்டியாகும் . அறிமுகப் போட்டியிலேயே இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்தது அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது .

மேலும் இவர் பங்களாதேஷ் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த நான்காவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார் . மேலும் பங்களாதேஷ் அணிக்காக அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த முதல் வங்கதேச வீரர் துவக்க ஆட்டக்காரர் என்ற சாதனையை இதன் மூலம் படைத்தார் ஜாகிர் ஹசன் .

இதற்கு முன் பங்களாதேஷ் அணிக்காக முகமது அஷ்ரஃபுல் அமீனுல் ஹக் அப்துல் ஹசன் ஆகியோர் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து இருந்தாலும் ஒரு துவக்க ஆட்டக்காரர் அறிமுக போட்டியிலேயே சதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும் . இதனால் பங்களாதேஷ் அணியின் டெஸ்ட் வரலாற்றில் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த துவக்க வீரர் என்ற சாதனையை ஜாகீர் ஹசன் இன்று நிறைவு செய்தார் .

224 பந்துகளில் 100 ரண்களை எடுத்திருந்த ஜாகிர் ஹசன் அஸ்வினின் பந்துவீச்சில் விராட் கோலி இடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார் . தற்போது பங்களாதேஷ் அணி 260 ரன்கள் 6 விக்கெட் இழந்துள்ளது .