லேட்டா வந்தாலும் லெட்டஸ்டா வருவான்டா இந்த ஹிட்மேன்… விராட் கோலியின் ரெக்கார்டை காலி செய்த ரோகித் சர்மா, புதிய ரெக்கார்ட்!

0
395

டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார் ரோகித் சர்மா. ரெக்கார்ட் பட்டியல் கீழே.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா நீண்ட நாட்களுக்கு பிறகு ஐபிஎல் போட்டிகளில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் சில சாதனைகளையும் முறியடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டிக்கு முன்பு ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி அணிக்கு எதிராக 912 ரன்கள் அடித்து, குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தார். விராட் கோலி 925 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார்.

பின்னர் டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில் ரோகித் சர்மா 65 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 977 ரன்களுடன் இந்த பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

டெல்லி அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்

- Advertisement -
  1. ரோகித் சர்மா – 977 ரன்கள்
  2. விராட் கோலி – 925 ரன்கள்
  3. அஜிங்க்யா ரஹானே – 792 ரன்கள்
  4. ராபின் உத்தப்பா – 740 ரன்கள்
  5. சுரேஷ் ரெய்னா – 661 ரன்கள்

போட்டி சுருக்கம்

தொடர்ந்து இரண்டு தோல்விகளுடன் டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில் விளையாட வந்த மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி அணி நிர்ணயித்த 123 ரன்கள் இலக்கை துரத்தியது. இதில் ரோகித் சர்மா 65 ரன்கள், திலக் வர்மா 41 ரன்கள் மற்றும் இசான் கிஷான் 31 ரன்கள் அடித்து அணிக்கு முக்கிய பங்காற்றினார். இறுதியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம் இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இருப்பினும் மூன்று போட்டிகளில் இரண்டு தோல்விகள் ஒரு வெற்றி என்பதால் இரண்டு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.