தனது ஆதங்கத்தை கொட்டி தள்ளிய டேவிட் வார்னரின் சகோதரர்

0
195
David Warner Brother

நடப்பு ஐபிஎல் சீசனில் தொடர்ந்து சொதப்பி வரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாகயிருந்த டேவிட் வார்னரை நீக்கிவிட்டு நியூசிலாந்து நாட்டைச் சார்ந்த நட்சத்திர வீரரான கனே வில்லியம்சனை தனது அணியின் புதிய கேப்டனாக நியமித்தது, அணி நிர்வாகம். இதனை கண்டு ரசிகர்கள் அனைவரும் கடும் ஏமாற்றம் அடைந்த போதிலும் அணியின் ஆடும் லெவனில் டேவிட் வார்னருக்கு எப்படியும் வாய்ப்பு உண்டு என்று நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், இவை அனைத்தையும் தவிடு பொடியாக்கும் நோக்கில் ஹைதராபாத் அணி நிர்வாகம் வார்னரை ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆடும் லெவனில் கூட சேர்க்கவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசன் முதலே ஐதராபாத் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக வலம் வந்த டேவிட் வார்னர், அணியின் ஒட்டுமொத்த ரன்களின் பங்களிப்பில் இவரது ஆட்டம் பெரிய அளவில் எடுபட்டு வந்துள்ளது. அதுமட்டுமின்றி 2016ஆம் ஆண்டு, சன்ரைசர்ஸ் அணி இவரது தலைமையில் முதல்முறையாக ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி வரை தகுதி பெற்றது.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல், அந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டு வெற்றி வாகை சூடி தனது முதலாவது ஐபிஎல் கணவை ரசிகர்களுக்கு விருந்தளித்தார். இதுபோன்ற மென்மேலும் சாதனைகளை இவர் புரிந்த போதிலும் நடப்பு தொடரில் இவரது ஆட்டம் சரியாக எடுபடவில்லை. எனவே, ஹைதராபாத் அணி நடப்பு சீசனில் தொடர்ச்சியாக தோல்வியை பெறுவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.


டேவிட் வார்னர் மட்டுமல்லாது அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேங்களான பலரும் போதிய பார்ம் இன்றி தவித்து வருகின்றனர். எனவே, இன்றைய போட்டியில் இவருக்கு பதிலாக வெளிநாட்டு வீரரான ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் முகமது நபி புதிதாக இணைக்கப்பட்டார். அணி நிர்வாகத்தின் நம்பிக்கைக்கு ஏற்ப நபி விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. தான் வீசிய ஒரே ஓவரில் மட்டும் 21 ரன்களை வாரி வழங்கி சோபிக்க தவறினார்.

பின்னர், பெருவாரியான ரன்களை சேசிங் செய்யும் முனைப்பில் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய அணியின் தொடக்க வீரராக ஜானி பேர்ஸ்டோ பேட்டிங் செய்ய அவருக்கு உறுதுணையாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான மனிஷ் பாண்டே இம்முறை தொடக்க வீரராக கைகோர்த்தார். ஐதராபாத் அணியின் பேட்டிங்கில் களம் கண்ட போதிலும் ஆல்ரவுண்டர் முகமது நபியால் 17 ரன்களை மட்டுமே இவரால் குவிக்க முடிந்தது. இதனைக் கண்டு ஆத்திரமடைந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் ஏன் இவரை தேவையின்றி அணியில் இணைத்தனர். அதுவும் வார்னரை நீக்கிவிட்டு இவரை சேர்த்தது தேவையில்லாத ஒன்றாகவே தோன்றியதாக கருதினர்.

- Advertisement -

பல்வேறு ரசிகர்களைப் போலவே தனது ஆதங்கத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் டேவிட் வார்னரின் சகோதரரான ஸ்டீவ். அவரும் ரசிகர்களின் கருத்தையே வெளிப்படுத்தும் வண்ணம் தனது பதிவில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “தொடர்ந்து பல வருடங்களாய் அணியை வழிநடத்தி வரும் டேவிட் வார்னர் தொடக்க வீரராய் இருப்பது உங்களது அணியின் பிரச்சனை இல்லை. போதிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இருந்தால்தான் நல்ல ஒரு ஸ்கோரை எட்ட முடியும்” என தனது இன்ஸ்டாகிராம் போஸ்டில் குறிப்பிட்டுள்ளார்.

Warner Brother Instagram post

இன்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் ஆகிய கனே வில்லியம்சன் தமது அணியின் சக வீரரான வார்னரை பற்றி கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். “வார்னர் ஒரு உலகத்தரமிக்க வீரர். அவருக்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளது. தொடர்ந்து இதைப் பற்றி விவாதிப்பதை உறுதியளிக்கிறேன்” என்றார்.துவங்கிய