என்னால நம்ப முடியல – சூரியகுமார் யாதவ் ஆல் டைம் ஐ.பி.எல் XI குறித்து டேவிட் வார்னர் கிண்டல்

0
482
David Warner and Suryakumar Yadav

மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேனும் இந்திய அணி வீரருமான சூரியகுமார் யாதவ் சமீபத்தில் தனது ஆல் டைம் ஐ.பி.எல் XI அறிவித்துள்ளார். அதில் ரோஹித் ஷர்மா , விராட் கோலி , ஏ பி டிவிலியர்ஸ் போன்ற முன்னணி வீரர்களும் தனது அணியின் சக வீரர்களான ஹர்டிக் பாண்டியா , ஜஸ்பிரித் பும்ரா போன்ற வீரர்கள் உள்ளடக்கிய அணியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரும் , சன்ரைசர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமாகிய அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னருக்கு வாய்ப்பில்லை .

ராஜஸ்தான் அணியின் அதிரடி வீரரான ஜோஸ் பட்லர் தொடக்கவீரராக ரோஹித் சர்மாவுடன் களமிறங்க விராட் கோலி மூன்றாம் வரிசையிலும் , சூரிய குமார் யாதவ் நான்காம் வாரிசையிலும் , ஏ பி டிவிலியர்ஸ் ஐந்தாம் வரிசையிலும் பேட்டிங் செய்வார்கள் . அவர்களை தொடர்ந்து ஹர்டிக் பாண்டியா , அன்ரே ரஸ்ஸில் , ரவீந்திர ஜடேஜா , ரஷித் கான் , ஜஸ்பிரித் பும்ரா , மொஹமத் ஷமி ஆகியோரை கொண்டுள்ளது சூரியகுமார் யாதவின் ஆல் டைம் ஐ.பி.எல் XI.

- Advertisement -
Suryakumar Yadav IPL

டேவிட் வார்னர் சூரியகுமார் யாதவின் ஆல் டைம் ஐ.பி.எல் XI தான் இல்லாததை குறித்து டிவிட்டரில் ஒரு டிவிட் செய்துள்ளார் அதில் “ நான் இல்லாத அணியா ? என்னால நம்பவே முடியவில்லை என நகைச்சுவையுடன் தெரிவித்துள்ளார் . 148 ஐ.பி.எல் போட்டிகளில் 42.22 சராசரியுடன் 5547 ரன்களை குவித்துள்ள டேவிட் வார்னர் . ஐ.பி.,எல் 2021 சிறப்பாக செயல்படாததால் கேப்டன் பதவியிலிருந்து கழட்டிவிடப்பட்டார் அவருக்கு பதில் கனே வில்லியம்சன் புதிய கேப்டனாகினார். மோசமான ஃபார்ம் காரணமாக சில ஆட்டங்களிலும் கழட்டிவிடப்பட்டார் . இதுவரை டேவிட் வார்னர் மூன்று முறை ஆரஞ்சு தொப்பியும் ஒரு முறை கோப்பையும் வென்றுள்ளார் . 20 ஓவர் கிரிக்கெட்டில் 4 சதங்களும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

30 வயதான சூரியகுமார் யாதவ் 98 லிஸ்ட் A போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுவரை 2779 ரன்கள் அடித்துள்ளார் . அதில் 3 சதங்களும் 17 அரைசதங்களும் அடித்துள்ளார் . தற்போது இலங்கை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருகிறார். அதில் 3 ஒருநாள் போட்டிகளிலும் , 3 டி-20 போட்டிகளிலும் விளையாடவுள்ளது . இந்த தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமாகவுள்ளார் . இப்போட்டி வருகிற ஜூலை 18 அன்று கொழும்புவில் நடக்கவிருக்கிறது