எல்லாமே பச்சை பொய்.. உ.கோ பைனலுக்கு பின்னாடி வந்த அந்த விஷயத்தை யாரும் நம்ப வேண்டாம் – ஓய்வு பற்றி டேவிட் மில்லர் பேச்சு

0
2262
Miller

நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்த போதிலும் கூட, அந்த அணியின் ஹென்றி கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் இருவருக்கும் மிகவும் சோகமான போட்டியாக அமைந்திருக்கிறது. இந்த நிலையில் டேவிட் மில்லர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக செய்திகள் பரவியது. அது குறித்து தற்போது அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.

தற்போது 35 வயதான டேவிட் மில்லர் உலகம் முழுக்க நடைபெறும் டி20 போட்டிகளில் பினிஷராக மிகவும் முக்கியத்துவம் பெற்ற வீரராக இருக்கிறார். ஆனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஃபினிஷராக சரியாக செயல்பட முடியாதது அவரை பெரிய சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

- Advertisement -

இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா பேசிய இறுதி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரின் முதல் பந்திலேயே சூரியகுமார் யாதவியின் அருமையான கேட்ச் மூலம் டேவிட் மில்லர் ஆட்டம் இழந்து பரிதாபமாக வெளியேறினார்.

இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்தவுடன் முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றும் கனவையும் சிதைத்துக் கொண்டது. இறுதியாக ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைய இந்திய அணி சாம்பியன் ஆனது.

இந்த நிலையில் நேற்று இரவு டேவிட் மில்லர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாகவும் அவருடைய பெயரில் அறிக்கை ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியானது. ஆனால் தற்போது அது வெறும் வதந்தி என்பது தெளிவாக இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : தோனியை விட ரோகித் சர்மா கேப்டனாக சிறந்தவரா?.. 2 பேருக்கும் நடுவுல அந்த வித்தியாசம் இருக்கு – தினேஷ் கார்த்திக் பேட்டி

தன்னுடைய ஓய்வு பற்றி பரவிய வதந்தி குறித்து பேசி இருக்கும் டேவிட் மில்லர் கூறும் பொழுது “அந்த தகவல்கள் அனைத்தும் பொய்யானது. நான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை.தென் ஆப்பிரிக்க அணிக்காக நான் தொடர்ந்து விளையாடுவேன். என்னுடைய சிறந்தது இன்னும் வரவில்லை இனிமேல்தான் வரும்” எனக் கூறியிருக்கிறார். இதன் மூலம் அவர் ஓய்வு பற்றியான சர்ச்சை முடிவுக்கு வந்திருக்கிறது.