கிரிக்கெட்

ராகுல் டிராவிட் கூறிய வார்த்தைகள் – இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் ; இலங்கை கேப்டன் தசுன் ஷனாங்கா நெகிழ்ச்சி

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது ஏற்கனவே இரண்டு போட்டியில் வென்றதன் மூலம் தொடரை கைப்பற்றிய இந்திய அணி கடைசி போட்டியில் பல மாற்றங்களை அணியில் செய்தது . 5 புதுமுகங்கள் அறிமுகமானார்கள் . இந்திய அணியில் பெரும்பாலும் இளம் வீரர்களாகவே இருந்தார்கள். தொடக்க வீரரும் கேப்டனுமான ஷிகர் தவான் தொடக்கத்திலேயே தனது விக்கெட்டை இழந்தார் பின்னர்.

- Advertisement -

அறிமுக வீரர் சஞ்சு சாம்சன் களமிறங்கினார் பிரித்திவி ஷா மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் மிகவும் சிறப்பாக விளையாடி ரன்களை மளமளவென உயர்த்தினார்கள். 49 ரன்கள் எடுத்த நிலையில் ப்ரித்திவி ஷா வெளியேறினார். அவரைத் தொடர்ந்து 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சஞ்சு சாம்சனும் வெளியேறினார்.அப்போது போட்டியின் நடுவே மழை குறுக்கிட்டது.

இதனால் போட்டி நிறுத்தப்பட்டது சில மணி நேரம் மழை குறுக்கிட காரணத்தினால் ஓவர் 47 ஆக மாறியது . அப்போது பிட்சை பார்வையிட வந்த இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இலங்கை அணியின் கேப்டனும் இளம் வீரருமான தசுன் ஷனாங்காவிடம் சிறிது நேரம் அறிவுரைகளை வழங்கினார். உதவினு வந்துட்டா இந்த கைப்புள்ள கடங்காரனா மாறிவிடுவான் என்ற வசனத்தை போல இளம் வீரர்களுன்னு வந்துட்டாலே தன்னால் முடிந்த அறிவுரைகளை வழங்க கூடியவராக ராகுல் டிராவிட் வலம் வந்து வருகிறார்.எந்த அணியின் இளம் வீரராக இருந்தாலும் அவர்களுக்கு தேவையான அறிவுரை வழங்குகிறார்.

போட்டி தொடங்கிய பின்னர் இறங்கிய இலங்கை அணி பட்டையை கிளப்பியது மளமளவென விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியை 235 ரன்களுக்குள் சுருக்கியது. கடந்த 2 ஆட்டங்களில் இல்லாத ஒரு வேகம் இந்த ஆட்டதில் மழை வந்து பிறகு இந்த போட்டியில் கிடைத்துள்ளது . இதற்கு ராகுல் டிராவிட் கூறிய அறிவுரைகள் மிக முக்கியமாக உள்ளதாக வலைதளங்களில் பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

பின்னர் 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி சற்று பலமாக விளையாடியது . முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியை இறங்கி அணி வீழ்த்தியது. இந்திய அணி சார்பில் ராகுல் சஹர் 3 விக்கெட்களையும், சேட்டன் சக்காரியா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை கேப்டன் தசுன் ஷனங்கா.

இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்

“ தொடரை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். இன்றைய போட்டியில் நமது அணியின் வீரர்கள் மிகவும் அற்புதமாக விளையாடினார்கள் . குறிப்பாக இளம் வீரர்கள் மிகவும் துல்லியமாக பந்து வீசினார்கள் இத்தகைய செயல்பாடு என்னை மிகவும் கவர்ந்தது . நிச்சயம் வருங்காலத்தில் இவர்கள் நிறைய சர்வதேச போட்டிகளில் கலக்குவார்கள் என்று எண்ணுகிறேன். நீண்ட வருடங்களாக இலங்கையில் தோல்வியை காணாத இந்திய அணியை நாங்கள் வீழ்த்துயது மிகவும் நிறைவாக உள்ளது . அணி வீரர்களுக்கும் மற்றும் உதவியாளர்களுக்கும் இந்த சமயத்தில் நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன் . அதே சமயம் தொடரை வென்ற இந்திய அணிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் “ என்று கூறினார்