ரோகித் சர்மா பெயர் இல்லாமல் டேனிஷ் கனெரியா வெளியிட்ட இந்த ஆண்டின் சிறந்த டி20 அணி

0
636
Danish Kaneria and Rohit Sharma

ஆண்டு இறுதியில் போது அந்த ஆண்டில் சிறப்பாக விளையாடிய பதினொரு வீரர்களை கொண்டு ஒரு அணியை வெளியிடுவதில் பலரது வழக்கம். அதே போலத் தான் தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான டேனிஷ் கனெரியா ஒரு அணியை வெளியிட்டு உள்ளார். கனெரியா வெளியிட்டுள்ள அணியில் துவக்க வீரர்களாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் விக்கெட் கீப்பர் முஹம்மது ரிஸ்வான் ஆகியோர் உள்ளனர். இந்த ஆண்டு டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர் முஹம்மது ரிஸ்வான் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பக்கபலமாக சிறப்பாக விளையாடி அவர் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம். அதனால் இந்த இரண்டு வீரர்களையும் துவக்க வீரர்களாக தேர்ந்தெடுத்தது பலருக்கும் ஆச்சரியம் அளிக்காது.

மிடில் ஆடர் வீரர்களாக இங்கிலாந்து அணியின் பட்லர், லிவிங்ஸ்டன் மற்றும் ஆஸ்திரேலியாவின் மிட்சல் மார்ஷ் ஆகியோர் உள்ளனர். பட்லர் டி20 உலக கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிராக சதம் கடந்தார். லிவிங்ஸ்டன் அதிரடியாக சுற்றுச்சூழல் விலாசுவதில் வல்லவர். அதேபோல ஆஸ்திரேலியாவின் மிட்சல் மார்ஷ் டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியாவிற்கு வெற்றி பெற்று கொடுத்தவர். மேலும் இந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆக இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் உள்ளனர். நீண்ட காலமாகவே இருவரும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சில் பெரும்பங்கு வகிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. லெக் ஸ்பின்னராக ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா இவரது அணியில் இடம்பெற்றுள்ளார்.

- Advertisement -

வேகப்பந்து வீச்சாளராக பாகிஸ்தான் அணியின் சகீன் அஃப்ரிடி, நியூசிலாந்தின் டிரண்ட் போல்ட் மற்றும் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். 12 ஆவது வீரராக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இடம் பிடித்துள்ளார். இருந்தாலும் இந்த ஆண்டு டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ரோகித், ராகுல், வில்லியம்சன் போன்றோர் இவரது அணியில் இடம்பெறவில்லை. டி20 போட்டிகளில் எப்போதும் சிறப்பாக விளையாடும் எந்த ஒரு மேற்கிந்திய தீவுகள் வீரரும் இவரது அணியில் இடம்பெறவில்லை. அதேபோல எந்த ஒரு தென் ஆப்பிரிக்கா வீரருக்கும் இடம் இல்லாததால் ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

டேனிஷ் கனெரியாவின் இந்த ஆண்டுக்கான டி20 அணி – பாபர், ரிஸ்வான், பட்லர், லிவிங்ஸ்டன், மார்ஷ், ஜடேஜா, அஷ்வின், ஜாம்பா, அஃப்ரிடி, போல்ட், பும்ரா, பண்ட் (12வது வீரர்)