சஞ்சு சாம்சன் கிரிக்கெட் வாழ்வையும் அம்பதி ராயுடு போல் பிசிசிஐ முடித்துவிடும் – முன்னாள் வீரரின் சர்ச்சை கருத்து

0
1917
Rayudu Sanju

இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடர் நடந்து கொண்டிருக்கும் வேளையில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இரண்டாவது போட்டி மழையினால் கைவிடப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது . இந்நிலையில் இரண்டு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது .

இந்தப் போட்டியிலும் இந்திய அணியின் ஆடும் லெவனில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை . முதல் போட்டியின் ஆடும் இடம் பெற்றிருந்த அவர் 36 ரன்களையும் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது . தொடர்ந்து சாம்சனிற்கு இருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவது குறித்து பல முன்னால் வீரர்களும் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் .

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தானின் முன்னாள் வீரர் டேனிஷ் கனீரியா ” அம்பட்டி ராயுடுவின் கிரிக்கெட் வாழ்வை முடித்ததைப் போல் சாம்சன் கிரிக்கெட் வாழ்வையும் பிசிசிஐ நிர்வாகம் முடித்து விடும்” என்று சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார் ,

சாம்சன் அணியில் இடம் பெறாதது குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ள அவர் ” 2019 உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்பாக அம்பட்டி ராயுடு ஒரு நாள் போட்டிகளில் அதிகமான ரன்களை குவித்து வந்தார் , இருப்பினும் பிசிசிஐ தேர்வு குழுவில் நிலவும் அரசியலின் காரணமாக அவர் உலக கோப்பை காண அணியில் இடம் பெறவில்லை இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தன்னுடைய ஓய்வை அறிவித்தார் . இதே போன்ற ஒரு நிலைக்கு தான் சாம்சுனையும் இந்திய கிரிக்கெட் வாரியம் நிர்பந்திப்பது போல் தெரிகிறது” என்றும் கூறினார் ,

இது பற்றி மேலும் பேசி உள்ள அவர் ” ஒரு வீரராலும் எவ்வளவு நாள்தான் சகித்துக் கொள்ள முடியும் சாம்சன் தனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் நன்றாக விளையாடி தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் . அவர் கடைசியாக ஆடி உள்ள 11 போட்டிகளில் சராசரியாக 60 வைத்திருக்கிறார் . இருப்பினும் அவரை ஆடும் லெவனில் சேர்க்காமல் தொடர்ந்து புறக்கணிப்பது அவரது கிரிக்கெட் வாழ்வை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று கூறி முடித்தார்.

டேனிஷ் கனிரியா பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது . இவர் பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் மட்டும் ஒரு நாள் போட்டிகளில் ஆடி உள்ளார் தற்பொழுது கிரிக்கெட் விமர்சகராக பங்காற்றி வரும் இவர் அவ்வப்போது கூறும் கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது . சில நாட்களுக்கு முன் சாகித் குறித்தும் பாகிஸ்தான் வாரியம் குறித்தும் கூறிய கருத்துக்களும் சர்ச்சையாகின என்பது குறிப்பிடத்தக்கது .