2022 ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறும் 4 அணிகள் இதுதான் – டேனியல் வெட்டோரி கணிப்பு

0
4415
Daniel Vettori

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனில் ஏறக்குறைய முன்னாள் சாம்பியன் அணிகள் பிளே-ஆப்ஸ் வாய்ப்பை இழந்திருக்கின்றவேளையில், புதிய அணிகளான குஜராத் அணியும், லக்னோ அணியும் யாரும் எதிர்பாராத வகையில் புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

தொடரின் பாதி முடிந்திருக்கும் நிலையில் குஜராத் அணி முதலிடத்திலும், அதற்கடுத்த மூன்று இடங்களில் ஹைதராபாத், ராஜஸ்தான், லக்னோ அணிகள் இருக்கின்றன. குஜராத் அணி இரு ஆட்டங்களிலும், மற்ற அணிகள் மூன்று ஆட்டங்களிலும் வென்றால் ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பை உறுதிப்படுத்தும் நிலையில் இருக்கின்றன!

- Advertisement -

இதற்கடுத்த இடங்களில் பெங்களுர், பஞ்சாப், டெல்லி, கொல்கத்தா, சென்னை, மும்பை அணிகள் இருக்கின்றன. இவற்றில் மும்பை அணி ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பிலிருந்து வெளியேறி இருக்க, சென்னை அணியும் ஏறக்குறைய ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பிலிருந்து வெளியேறி இருக்கிறதென்றே கூறலாம்!

இந்த நிலையில் முன்னாள் நியூசிலாந்து கேப்டனும் வெற்றிக்கரமான சுழற்பந்து வீச்சாளருமான, ஐ.பி.எல்-ல் பெங்களூர் அணிக்காகத் தலைமையேற்று வழிநடத்தி இருப்பவருமான டேனியல் வெட்டேரி, இந்த ஆண்டு ப்ளே-ஆப்ஸ் சுற்றை எட்டும் அணிகளாக நான்கு அணிகளைக் கூறியிருக்கிறார்.

டேனியல் வெட்டோரியின் ப்ளே-ஆப்ஸ் அணிகள்

குஜராத்
ராஜஸ்தான்
பெங்களூர்
லக்னோ

- Advertisement -