மீண்டும் ஹைதராபாத் அணிக்காக களம் இறங்கும் டேல் ஸ்டெயின் ; சன்ரைசர்ஸ் அணியில் பெரிய பொறுப்பைப் பெறவுள்ள ஹேமங் பதானி

0
500
Dale Steyn and Hemag Badani SRH

வரும் ஐபிஎல் தொடரில் 8 அணிகளுக்கு பதிலாக 10 அணிகள் விளையாடும் என்பதை முன்பே பிசிசிஐ அறிவித்துவிட்டது. அதன் காரணமாக ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் தங்கள் வீரர்களில் அதிகபட்சமாக நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டு மற்ற வீரர்களை அணியில் இருந்து விடுவித்து விட்டனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தவரை நிச்சயமாக அந்த அணியில் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் தக்க வைக்கப்படுவர் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த அணி நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனை முதல் வீரராக தக்க வைத்தது. மேலும் இளம் வீரர்களான அப்துல் சமத் மற்றும் உம்ரன் மாலிக் ஆகியோரையும் தக்க வைத்துக் கொண்டது.

மிகச்சிறந்த t20 பந்து வீச்சாளரான ரசித் கானை தக்க வைக்காமல் விடுவித்தது அந்த அணியின் ரசிகர்கள் இடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல காலமாக அந்த அணியில் விளையாடிய தென் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த டேல் ஸ்டெய்ன் தற்போது மீண்டும் அந்த அணிக்காக பங்காற்ற உள்ளார். இதுவரை களத்தில் இறங்கி பந்து வீசி பல விக்கெட்டுகளை அந்த அறைக்கான பெற்றுத்தந்த ஸ்டெயின் இந்த முறை பந்துவீச்சு பயிற்சியாளராக களமிறங்க உள்ளார். கடந்த முறை நல்ல வேகப்பந்துவீச்சாளர் இல்லாத காரணத்தினால் சன்ரைசர்ஸ் அணி பல முக்கியமான நாட்களில் தோல்வியைத் தழுவியது. மேலும் அந்த அணி கடைசி கட்டத்தில் தான் உம்ரான் மாலிக் என்னும் சிறந்த பந்து வீச்சாளரை கண்டுபிடித்தது. அப்போது அந்த இளம் பந்து வீச்சாளரை மெருகேற்ற இந்த தலைமுறையின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று அறியப்படும் டேல் ஸ்டெய்னை பந்துவீச்சு பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்துள்ளது.

- Advertisement -

மேலும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் ஆஸ்திரேலிய அணி வீரர் டாம் மூடியை ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் முன்னாள் தமிழக வீரர் ஹேமங் பதானியும் சன்ரைசர்ஸ் அணிக்காக பங்களிக்க உள்ளார். இந்த முறையாவது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சிறப்பாக செயல்பட்டு மீண்டும் ஒரு முறை கோப்பையை கைப்பற்றுமா என்று அந்த அணி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்