இந்த இரண்டு மும்பை இன்டியன்ஸ் வீரர்கள்தான் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆள்வார்கள் – டேல் ஸ்டெயின்

0
18
Dale steyn

இங்கிலாந்தில் இந்திய அணி தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வெஸ்ட் இன்டீஸ் சென்றுவிட்டது. நடைபெற்ற டி20, ஒருநாள் தொடர்களை இந்திய அணியிடம் 1-2 என இங்கிலாந்து அணி தனது சொந்த நாட்டில் இழந்தது!

இதையடுத்து செளத் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது. தலா மூன்று போட்டிகள் கொண்டா ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர்களில் இங்கிலாந்து செளத் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடுகிறது.

இதில் முதலில் நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் செளத் ஆப்பிரிக்கா வெல்ல, இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது. மூன்றாவது போட்டி மழையால் முடிவில்லாமல் போக, ஒருநாள் தொடர் 1-1 என சமன் ஆனது.

இதையடுத்து நேற்று பிரிஸ்டல் கவுன்டி மைதானத்தில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து ஜானி பேர்ஸ்டோவின் 90[53], மொயீன் அலியின் 52[18] அதிரடி அரைசதங்களால், இருபது ஓவர்களின் முடிவில் 234/6 ரன்களை குவித்தது!

இதையடுத்து மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய செளத் ஆப்பிரிக்கா அணி 9.4 ஓவர்களில் 86 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து களமிறங்கிய இளம்வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இங்கிலாந்து அணியை அதிரடியில் மிரட்டி எடுத்து விட்டார். மொத்தம் 28 பந்துகளை மட்டுமே சந்தித்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 72 ரன்களை குவித்து அசத்தினார். இதில் இரண்டு பவுண்டரிகளோடு எட்டு சிக்ஸர்களும் அடக்கம்!

இதைப்பற்றி செளத் ஆப்பிரிக்கா லெஜன்ட் பாஸ்ட் பவுலர் டேல் ஸ்டெயின் கூறும் பொழுது “டிரிஸ்டன் ஸ்டப்ஸ்சும், டிவால்ட் பிராவிசும் அடுத்த பத்தாண்டுகளுக்கு மேல் இரசிகர்களை தங்களது பேட்டிங்கால் மகிழ்விப்பார்கள்” என புகழ்ந்து கூறியிருக்கிறார். இந்த இருவருமே மும்பை இன்டியன்ஸ் அணியிலுள்ள வீரர்கள் ஆவார்கள். இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் டிவால்ட் பிரிவீஸை மூன்று வாங்கிய மும்பை அணி, இடையில் டிரிஸ்டன் ஸ்டப்சை வாங்கியது குறிப்பிடத்தக்கது!