2012 யு-19 ஆசியக் கோப்பை தொடரில் விளையாடிய கேப்டன்களின் தற்போதைய நிலை

0
260
Babar Azam Unmukt Chand and Virat Kohli

ஆசிய கோப்பை தொடர் ஆசிய அணிகள் மோதிக்கொள்ளும் மிகப்பெரிய தொடராகும். ஆசியக் கண்டத்திற்கும் சிறந்த அணி எது என்று தேர்ந்தெடுக்கும் விதமாக இந்த தொடர் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த முறை அமீரகத்தில் நடந்த ஆசிய கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றியது. சீனியர் ஆணி விளையாடுவது போலவே 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடர் உண்டு என்பதே பல ரசிகர்களுக்கு தெரியாது. அப்படி கடந்த 2012 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் விளையாடிய அணிகளின் கேப்டன்கள் தற்போது எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று காணலாம்.

ஆப்கானிஸ்தான் – ஜாவித் அகமதி

ஆப்கானிஸ்தான் அணியை கடந்த 2012 ஆம் ஆண்டு வழிநடத்திய இவர் தற்போது சீனியர் அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகள் 47 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

வங்கதேசம் – அசிப் அஹமத்

கடந்த 2012ஆம் ஆண்டு வங்கதேச அணியை அரையிறுதிப் போட்டி வரை வழிநடத்திய அசிப் அஹமத் வங்காளதேச அணிக்காக 23 வயதுக்குட்பட்டோருக்கான அணியிலும் விளையாடியுள்ளார். இதுவரை சீனியர் அணியில் விளையாடும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்கவில்லை.

பாகிஸ்தான் – பாபர் அசாம்

அந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை இறுதிப் போட்டி வரை வழிநடத்திச் சென்ற பாபர் அசாம் தற்போது பாகிஸ்தான் சீனியர் அணியை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.

இலங்கை – சனிதா டி மெல்

இலங்கை அணியை 2012 ஆம் ஆண்டு ஜூனியர் ஆசிய கோப்பை தொடரில் வழிநடத்திய இவர் இன்று வரை சீனியர் அணிக்கு விளையாட வில்லை. கடந்த 2019ஆம் ஆண்டு தனது கடைசி உள்ளூர் 50 ஓவர் போட்டியை இவர் விளையாடினார்.

மலேசியா – டெரிக் துரைசிங்கம்

டெரிக் துரை சிங்கமும் இந்த ஆசிய கோப்பை தொடருக்கு பின்பு பெரிதாக சாதிக்க இயலவில்லை. இவர் தனது கடைசி போட்டியை கடந்த 2018 ஆம் ஆண்டு விளையாடினார்.

கத்தார் – தமூர் சஜ்ஜத்

ஆசிய கோப்பை தொடரில் கத்தார் அணியை கடந்த 2012 ஆம் ஆண்டு வழிநடத்திய இவர் தற்போது வரை கத்தார் சீனியர் அணிக்காக 16 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இந்தியா – உன்முக்த் சந்த்

2011 ஆம் ஆண்டு இந்திய அணியை வெற்றிகரமாக ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை வழிநடத்திய கேப்டன் உன்முக்த் சந்த். இவர் தற்போது இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று அமெரிக்காவில் விளையாடி வருகிறார்.

நேபால் – ப்ரித்து பஸ்கோட்டா

இவரும் தற்போது வரை நேபால் சீனியர் அணிக்காக எந்த ஒரு இடத்திலும் விளையாடவில்லை. சமீபத்தில் மக்மாட்டி மகானத்து அணிக்காக விளையாடினார்.