ஐசிசி டி20 உலகக் கோப்பை வென்ற கேப்டன்களின் தற்போதைய நிலை

0
126
Dhoni and Malinga With T20 Trophy

50 ஓவர் உலகக்கோப்பையைப் போல டி20 உலகக்கோப்பையும் மதிப்புமிக்க தொடராக போற்றப்படுகிறது. டி20யில் அதிரடிக்கு பஞ்சமிருக்காது. ஆனால் அதோடு சேர்த்து நுட்பமான ஆட்டமும் இருந்தால் மட்டுமே போட்டியை வெல்ல முடியும். கோப்பையை கைப்பற்ற வேண்டுமென்பது அனைவரும் எண்ணுவர். திறமை வாய்ந்த கேப்டன்கள் பலரால் சாம்பியன் பட்டம் பெற இயலவில்லை. நடைபெற்ற 7 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இதுவரை 6 கேப்டன்கள் கோப்பையை உயர்தியுள்ளனார். அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் பின்வருமாறு பார்ப்போம்.

ஆரோன் பின்ச் – 2021

நடப்பு டி20 உலகக்கோப்பை சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தியவர், ஆரோன் பின்ச். நாக் அவுட் போட்டிகளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் முறையாக டி20 டிராபியை கைப்பற்றினர். அடுத்த ஆண்டிற்கான தொடர், ஆஸ்திரேலிய மைதானத்தில் நடைபெற உள்ளது. ஆகையால், இக்கோப்பையை தக்க வைத்துக் கொள்ள அவர்களுக்கு பொன்னான வாய்ப்பு இருக்கிறது. அத்தொடரிலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பின்ச் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

டேர்ரன் சம்மி – 2012 & 2016

டி20 உலகக்கோப்பையை 2 முறை வென்ற கேப்டன், டேர்ரன் சம்மி மட்டுமே. 2014ல் இலங்கை அணியையும் 2016ல் இங்கிலாந்து அணியையும் வீழ்த்தி இச்சாதனையை படைத்தனர். இவர் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்று தற்போது வர்னையாளராக பணிபுரிந்து வருகிறார்.

லசித் மலிங்கா – 2012

2014 இறுதிப் போட்டியில் இந்தியாவை, மலிங்கா தலைமையிலான இலங்கை அணி வென்றது. தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான மலிங்கா, ஓராண்டிற்கு முன் கிரிக்கெட்டில் இருந்து தன் ஓய்வை அறிவித்தார். தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

பால் காலிங்வுட் – 2010

ஆசிய அணிகளைத் தவிர, டி20 உலகக்கோப்பையை உயர்த்திய முதல் அணி இங்கிலாந்து. காலிங்வுட் பொறுப்பேற்று வழிநடத்திய அவ்வணி பைனலில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. இவர் நடப்பு இங்கிலாந்து அணியின் உதவி பயிற்சியாளராக செயல்படுகிறார்.

- Advertisement -

யூனிஸ் கான் – 2009

2007ல் சோயிப் மாலிக்கின் பாகிஸ்தான் அணி விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் வீழ்ந்தது. அதற்கு அடுத்த ஆண்டே யூனிஸ் கான், தன் நாட்டிற்காக அக்கோப்பையை பெற்றுத் தந்தார். இவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று பயிற்சியாளராகும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

எம்.எஸ்.தோனி – 2007

கேப்டன் தோனி தலைமையிலான இளம் இந்திய அணி, திரில் வெற்றி பெற்று முதல் ஐசிசி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது. சோகம் என்னவென்றால், அதற்குப் பிறகு இந்தியாவால் தன் அடுத்த டி20 கோப்பையை வெல்ல முடியவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தன் ஓய்வை பெற்றுக் கொண்ட தோனி, ஐ.பி.எலில் மட்டும் தொடர்ந்து ஆடுகிறார். நடந்து முடிந்த 2021 டி20 உலகக்கோப்பையில் அவர் இந்திய அணியின் மென்டராகவும் திகழ்ந்தார்.