2008 ஐ.பி.எலில் பயிற்சியாளர்களாக செயல்பட்டவர்களின் தற்போதைய நிலை

0
716
Tom Moody and Shane Warne

2007ல் நடைபெற்ற முதல் ஐசிசி டி20 கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது. அதற்கு அடுத்த ஆண்டில், பிசிசிஐ இந்தியன் பிரீமியர் லீக் எனும் தொடரை அறிமுகப்படுத்தியது. இத்தொடர் இளம் வீரர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாக கருதப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் 2007க்கு பிறகு இந்திய அணியின் அபார வளர்ச்சிக்கு ஐ.பி.எல் தான் காரணம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் அனைவரும் தெரிவிக்கின்றனர்.

தற்போது ஒரே நேரத்தில் இரு அணியை வைத்து விளையாடக் கூடிய அளவிற்கு இந்திய அணியின் வீரர்கள் உள்ளனர். வெளிநாட்டு வீரர்களைப் போல மற்ற நாட்டு பயிற்சியாளர்களும் ஐ.பி.எலுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். 2008 ஐ.பி.எலில் பயிற்சியாளர்களாக செயல்பட்டவர்களின் தற்போதைய நிலையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

- Advertisement -

ராபின் சிங் – டெக்கான் சார்ஜர்ஸ்

முதல் சீசனில் டெக்கான் சார்ஜர்ஸின் பயிற்சியாளராக ராபின் சிங் பணியாற்றினார். அவ்வருடம் டெக்கான் அணி கடைசி இடத்தில் பின்தங்கியது. அதற்கு பிறகு, ராபின் சிங் உலகம் முழுவதும் பல அணிகளுக்கு பயிற்சி அளித்தார். தற்போது அவர் ஐக்கிய அரபு அணியின் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.

லால்சந்த் ராஜ்புத் – மும்பை இந்தியன்ஸ்

ஐ.பி.எலில் வெற்றிகரமான அணியாக கருதப்படும் மும்பை இந்தியன்ஸின் முலால்சந்த் ராஜ்புத், லால்சந்த் ராஜ்புத் ஆவார். முதல் சீசனில் மும்பை அணி பல நட்சத்திர வீரர்களை வைத்திருந்தது. இருப்பினும் அவர்களால் அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற இயலவில்லை. ராபின் சிங்கைப் போல லால்சந்த் ராஜ்புத்தும் பல அணிகளுக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்றார். சமீபத்தில் அவர் ஜிம்பாப்வே அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

வெங்கடேஷ் பிரசாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

வெங்கடேஷ் பிரசாத் விளையாடிய காலத்தில் அவர் தான் இந்தியாவின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தார். 2008ல் பெங்களூர் அணிக்கு பயிற்சி அளித்தார். அவ்வாண்டு பெங்களூர் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. சமீபத்தில் வெங்கடேஷ் பிரசாத் விளம்பரப் படங்களில் காணப்பட்டுகிறார்.

- Advertisement -

கெப்பிளர் வெஸல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐ.பி.எலில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட அணி, சென்னை சூப்பர் கிங்ஸ். முதல் தொடரில் சி.எஸ்.கேவின் பயிற்சியாளராக கெப்பிளர் வெஸல்ஸ் பணியாற்றினார்.கெப்பிளர் வெஸல்ஸ், சர்வதேச கிரிக்கெட்டில் இரு நாடுகளுக்காக ஆடிய வீரர்களில் ஒருவர். 2008ல் சென்னை அணி இறுதிப் போட்டி வரை முன்னேறி அசத்தியது. அதற்கு அடுத்த ஆண்டு கெப்பிளர், தென்னாபிரிக்கா அணியின் பயிற்சியாளராக மாறினார்.

டாம் மூடி – கிங்ஸ் லெவன் பஞ்சாப்

இவர் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆவார். ஓய்வு பெற்ற பிறகு, பல அணிகளில் வெவ்வேரு துறையில் பணிபுரிந்தார். 2008ல் பஞ்சாப் அணி டாம் மூடியை பயிற்சியாளராக தேர்ந்தெடுத்தது. தற்போது அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இயக்குனராக உள்ளார்.

ஷேன் வார்னே – ராஜஸ்தான் ராயல்ஸ்

ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர், ஷேன் வார்னே. முதல் ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணியின் கோச்சாக மட்டுமில்லாமல் கேப்டனாகவும் செயல்பட்டார். அணியை சிறப்பாக வழிநடத்தி கோப்பையை வெல்ல உதவினார். இன்றும் அவர் ராஜஸ்தான் அணியில் பணிபுரிந்து வருகிறார்.

கிரிக் ஷெப்பர்ட் – டெல்லி டேர்டெவில்ஸ்

இவர் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர். கிரிக் ஷெப்பர்ட், 112 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் தன்னுடைய வாழ்கையை பயிற்சியாளராக தொடர வேண்டுமென்று விரும்பினார். ஆஸ்திரேலிய அணிக்கு பயிற்சி அளித்த பிறகு முதல் சீசனில் டெல்லி அணியை வழிநடத்தினார். தற்போது அவர் பிக் பேஷ் லீக்கில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார்.

ஜான் புக்கானன் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

2008 ஐ.பி.எலில் லீக் போட்டியுடன் வெளியேறிய நான்கு அணிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸும் ஒன்று. அவ்வணியின் பயிற்சியாளர், ஜான் புக்கானன். 2007ல் உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளரும் இவரே. அவரால் ஐ.பி.எலில் சிறப்பிக்க முடியவில்லை. 2011ம் ஆண்டு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இவரை இயக்குனராக நியமித்தது.