2017 புனே அணியின் கடைசி போட்டியில் ஆடிய 11 வீரர்களின் தற்போதைய நிலை

0
3754
Jayadev Unadkat and Shardul Thakur RPS

ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட்ஸ் எனும் அணி 2016 ஐ.பி.எல் தொடரில் அறிமுகமானது. இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு பதிலாக புதிய இரண்டு அணிகள் பங்கேற்கின்றன. அதில் ஒரு அணி புனே மற்றொன்று குஜராத் ஆகும். 2016ல் சென்னை அணியின் கேப்டன் தோனி, புனே அணிக்கும் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, குஜராத் அணியையும் வழிநடத்தினார். ஒரு முனையில் தோனி தலைமையிலான புனே அணி மோசமாக ஆடி லீக் சுற்றுடன் வெளியேறியது. மற்றொரு முனையில் குஜராத் அணி பிளேயாப் சுற்று வரை முன்னேறி அசத்தியது.

அதற்கு அடுத்த வருடம் புனே அணி நிர்வாகம் எம்.எஸ்.தோனிக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்டீவ் ஸ்மித்தை வழிநடத்த அழைத்தனர். 2017 ஐ.பி.எலில் ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட் அணி இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸிடம் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இறுதிப் போட்டியில் அனைத்தும் புனே அணிக்கு சாதகமாகவே நடந்து கொண்டிருந்தது. ஆனால் கடைசியில் மும்பை அணி சிறப்பாக பந்துவீசி வெற்றியை பறித்துக் கொண்டனர். புனே அணியின் கடைசி போட்டியில் ஆடிய 11 வீரர்களின் தற்போதைய நிலையை இக்கட்டுரையில் பார்ப்போம்.

- Advertisement -

தொடக்க வீரர்கள் – அஜிங்கிய ரஹானே & ராகுல் திரிப்பாத்தி

2017ம் ஆண்டு இவ்விரு வீரர்களும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். பைனலில் ரஹானே 44 ரன்களிலும் திரிப்பாத்தி 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நடப்பு ஐ.பி.எலில் ராகுல் திரிப்பாத்தி, கொல்கத்தா அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ஆடி வருகிறார். மற்றொரு ஒப்பனர் ரஹானே, டெல்லி கேப்பிட்டல் அணியில் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

மிடில் ஆர்டர் – ஸ்டீவ் ஸ்மித், எம்.எஸ்.தோனி & மனோஜ் திவாரி

2017 பைனலில் அரை சதம் அடித்த ஒரே வீரர் ஸ்டீவ் ஸ்மித். அதற்கு அடுத்த 3 வருடம் அவர் ராஜஸ்தான் அணிக்கு நகர்ந்தார். நடப்பு ஐ.பி.‌எல் தொடரில் ரஹானேவுடன் இணைந்து டெல்லி அணியில் ஆடி வருகிறார். ஓரிரு போட்டிகளில் அவர் களமிறங்கி, அணிக்கு தேவையான ரன்களை சேர்த்து வெற்றிக்கும் உதவினார்.

எம்.எஸ்.தோனி 2017க்கு பின் மீண்டும் சென்னை அணியுடன் இணைந்தார். தடைக்கு பிறகு முதல் வருடமே சென்னை அணியை வெற்றிப்பதைக்கு அழைத்துச் சென்றார். நடப்பு ஐ.பி.எலில் தோனியின் பேட்டிங் முன்னது போல் இல்லை. இருப்பினும் அணியில் முக்கிய மாற்றங்களை செய்து பிளேயாப் சுற்றுக்கு தகுதி பெற செய்தார்.

- Advertisement -

புனே அணியின் கடைசி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், மனோஜ் திவாரி. தற்போது நடந்து வரும் ஐ.பி.எலில் அவர் எந்த அணியாலும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்காததால் சமீபத்தில் அவர் அரசியலுக்கு நகர்ந்து விட்டார்.

ஆல்ரவுண்டர்கள் – டேன் கிறிஸ்டியன், வாஷிங்டன் சுந்தர் & ஷர்துல் தாக்கூர்

ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ்டியன், பிக் பேங் லீக்கில் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார். ஆதலால் 2021 ஐ.பி.எல் ஏலத்தில் நம்பி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் வாங்கியது. ஓரிரு போட்டிகளில் விக்கெட்டுகள் வீழ்தினாலும் பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவிற்கு அவர் ஜொல்லிகவில்லை.

மற்றொரு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீரரான வாஷிங்டன் சுந்தர் நடப்பு ஐ.பி.எல் தொடரின் முதல் பாதியில் மட்டும் ஆடினார். இரண்டாவது பாதியில் காயம் காரணமாக வெளியேறினார். புனே அணியில் சிறப்பாக ஆடியதற்கு பின்னர் அவர் சர்வதேச அளவு வரை உயர்ந்தார்.

இப்பட்டியலில் இருக்கும் கடைசி ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர். 2018 ஏலத்தில் சென்னை அணி இவரை வாங்கியது. சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தாக்கூர் மிகச் சிறப்பாக பந்துவீசி அசத்தினார். நடப்பு ஐ.பி.எல் தொடரின் இரண்டாவது பாதியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் இவரே. அதிக ரன்களை வாரி வழங்குகிறார் என்று கேலி செய்த அனைவரையும் தன்னை ‘ லார்ட் ‘ என்று அழைக்க செய்தார்.

பந்துவீச்சாளர்கள் – லாக்கி பெர்குசன், ஆதம் ஜாம்பா & ஜெயதேவ் உனத்கட்

தற்போது நடந்து முடிந்த இரண்டாவது ஐ.பி.எல் பாதியில் கொல்கத்தா அணிக்காக துல்லியமாக பந்துவீசி அசத்தினார் பெர்குசன். கொல்கத்தா அணி பிளேயாப் சுற்றுக்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய ஸ்பின்னர் ஆதம் ஜாம்பா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியைச் சேர்ந்தவர். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் முன்பே தனிப்பட்ட காரணத்தால் விலகிக் கொண்டார். இப்பட்டியலில் இருக்கும் கடைசி வீரர் ஜெயதேவ் உனத்கட். இடதுகை வேகப்பந்து வீச்சாளரான இவர் 2017ம் ஆண்டு புனே அணியின் முக்கிய அங்கமாக கருதப்பட்டார். அதற்கு அடுத்த இரண்டு ஏலத்திலும் பெரிய தொகைக்கு விலை போனார். தற்போது அவர் ராஜஸ்தான் அணியில் விளையாடி வருகிறார்.