உலக கோப்பையை விடுங்க.. பாகிஸ்தான் கூட தோக்க கூடாது- ஷிகர் தவான் ஆச்சரியமான பேச்சு!

0
670
Dhawan

இந்திய கிரிக்கெட்டில் மிகவும் துரதிஷ்டமான ஒரு வீரர் ஷிகர் தவான். எல்லா புள்ளி விபரங்களும் அவருக்கு சாதகமாக இருந்தும், அவர் இறுதியில் மூன்று வடிவ இந்திய கிரிக்கெட் அணியில் இருந்தும் விலக்கப்பட்டு இருக்கிறார்!

கடந்த ஆண்டு கேப்டன் ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்த, ஒருநாள் கிரிக்கெட்டில் இடைக்கால கேப்டனாக ஷிகர் தவான் இருந்தார். அவரது தலைமையின் கீழ்தான் ராகுல் டிராவிட் சுப்மன் கில்லை உள்ளே நுழைத்தார். பிறகு அதே கில்லுக்காக தன் இடத்தை ஷிகர் தவான் இழந்தார்.

- Advertisement -

ஆனாலும் அப்பொழுது கூட அதுகுறித்து எந்த ஒரு குறையையும், விமர்சனத்தையும் அவர் வெளியில் சொல்லவில்லை. மேலும் தன்னைவிட அவர் சிறப்பாக விளையாடியதால்தான் உள்ளே இருக்கிறார், நான் அணிக்குள் இல்லை என்று பெருந்தன்மையாக கூறினார்.

உலகக் கோப்பை மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருக்க, அனுபவம் வாய்ந்த அதுவும் இடதுகை பேட்ஸ்மேன் ஷிகர் தவான் மீண்டும் இந்திய அணிக்குள் வரவேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள். இன்னும் ஒருபடி மேலே போய் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட்டும் கூறியிருக்கிறார். ஐசிசி தொடர்களில் ஷிகர் தவான் மிகப்பெரிய வெற்றிகரமான வீரர் என்று புள்ளி விபரங்கள் சொல்லும்.

இந்த நிலையில் அவரிடம் இந்த உலகக் கோப்பை குறித்தும், உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி குறித்தும் கேள்வி முன்வைக்கப்பட்டது. அவர் வழக்கம் போல் மிகவும் நகைச்சுவையாக தன்னுடைய பதிலை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ஷிகர் தவான் கூறும் பொழுது ” உலகக்கோப்பை வென்றாலும் வெல்லாவிட்டாலும் பாகிஸ்தான் அணியிடம் தோற்று விடாதீர்கள். (சிரிக்கிறார்) இப்படி எப்போதுமே வெளியில் சொல்லப்படுவது உண்டு. ஆனால் உலகக்கோப்பையை வெல்வதுதான் முக்கியம். கடவுளின் கிருபையால் நாங்கள் இந்த முறை உலகக் கோப்பையை வெல்வோம்.

நிச்சயம் அந்தப் போட்டி உற்சாகமான ஒன்றாக இருக்கும். அதே சமயத்தில் அதிக அழுத்தம் மிகுந்ததாக இருக்கும். அவர்களுக்கு எதிராக விளையாடி முடிக்கும் பொழுது நிச்சயம் ஒரு திருப்தி உணர்வு இருக்கும். நான் விளையாடிய காலத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நிறைய வெற்றிகளே பெற்று இருக்கிறோம். களத்தில் மிகவும் தீவிரத் தன்மை அதிகமாக இருக்கும். அதே சமயத்தில் அவர்களுடன் நாங்கள் ஜாலியாக கொஞ்சம் அரட்டை அடித்ததும் உண்டு!” என்று கூறியிருக்கிறார்!