சி.எஸ்.கேவின் மாஸ்டர்ஸ்ட்ராக் – தோனியை 4வதாக இல்லாமல் 2வது வீரராக தக்க வைத்துக் கொண்டதற்கான காரணம்

0
530
MS Dhoni and CSK Management

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி, மொயின் அலி மற்றும் ருத்துராஜ் என மொத்தமாக நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. பிசிசிஐ கூறியிருந்த நிபந்தனைப்படி முதல் வீரராக தக்க வைக்கப்படும் வீரருக்கு 16 கோடி ரூபாயும், இரண்டாவது வீரருக்கு 12 கோடி ரூபாயும், மூன்றாவது வீரருக்கு 8 கோடி ரூபாயும், நான்காவது வீரருக்கு 6 கோடி ரூபாயும் வருமானமாக நியமிக்கப்படும்.

சென்னை அணி நிர்வாகம் வீரர்களை தக்க வைக்கும் முன்பே, மகேந்திர சிங் தோனி தன்னை 4-வது வீரராக வைக்கும்படி கூறி இருந்தார். தனக்கு 6 கோடி ரூபாய் போதும் என்றும் மற்ற வீரர்கள் அதிகமாக வருவாய் பெற்றுக் கொள்ளட்டும் என்று ஒரு நல்லெண்ண அடிப்படையில் அவ்வாறு கூறியிருந்தார்.
ஆனால் அவர் கூறியதை மீறி சென்னை அணி அவரை இரண்டாவது வீரராக தக்க வைத்தது. இதன்படி அவரது வருமானம் 12 கோடி ரூபாயாக கணக்கில் பதிந்தது.

- Advertisement -

முதல் வீரராக தக்க வைக்கப்பட்ட ஜடேஜாவுக்கு 16 கோடியும், மூன்றாவது வீரராக தக்க வைக்கப்பட்ட மொயின் அலிக்கு 8 கோடியும், 4-வது வீரராக தக்க வைக்கப்பட்ட ருத்ராஜுக்கு 6 கோடியும் வருமான கணக்கில் பதியப்பட்டது.

ஏன் மகேந்திர சிங் தோனி இரண்டாவது வீரராக தக்க வைக்கப்பட்டார்

மகேந்திர சிங் தோனி கூறியதை மீறி சென்னை அணி நிர்வாகம் அந்த முடிவை எடுத்ததற்கு பின்னால் ஒரு மிகப்பெரிய காரணம் உள்ளது. மகேந்திர சிங் தோனி தன்னுடைய கடைசி ஐபிஎல் போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவேன் என்று சமீபத்தில் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் அவர் அடுத்த ஆண்டு (2022) அல்லது அதற்கு அடுத்த ஆண்டு (2023) ஐபிஎல் தொடரில் தன்னுடைய கடைசி ஐபிஎல் போட்டியை விளையாடுவார் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம்.

மகேந்திர சிங் தோனி சென்னை அணியை விட்டு விலகும் வேளையில் அவருக்கு நியமிக்கப்பட்ட 12 கோடி ரூபாய் மொத்தமாக அப்படியே சென்னை நிர்வாக கணக்கில் பதிவேறும். அந்த 12 கோடி ரூபாய் அதற்கு அடுத்து வரக்கூடிய ஏலத்தில் மிகப்பெரிய அளவில் சென்னை அணிக்கு கைகொடுக்கும். இந்த விஷயத்தை சென்னை நிர்வாகம் நன்கு யோசித்திருக்கிறது. ஒருவேளை மகேந்திர சிங் தோனி 4-வது வீரராக தக்க வைக்கப்பட்டால், வெறும் 6 கோடி ரூபாய் மட்டுமே சென்னை அணியின் நிர்வாக கணக்கில் பதிவேறும்.

- Advertisement -

எனவே இந்தவொரு காரண அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் மிக சாமர்த்தியமாக யோசித்து, இந்த முடிவை எடுத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.