ஹைதராபாத்தை மடக்கிய துஷார்.. சிஎஸ்கே புள்ளி பட்டியலில் தாறுமாறு ஏற்றம்.. ஒரே வெற்றியில் மாறிய நிலவரம்

0
9994
CSK

ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசனில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் மீண்டும் சிஎஸ்கே அணி வெற்றிப்பாதைக்கு திரும்பியிருக்கிறது.

இன்றைய போட்டியில் முதலில் டாசியில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுக்க, சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த முறையும் துவக்க ஆட்டக்காரராக வந்த ரகானே ஒரு பவுண்டரியுடன் 12 பந்தில் ஒன்பது ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை கொடுத்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த ருதுராஜ் மற்றும் டேரில் மிட்சல் இருவரும் 64 பந்துகளுக்கு 17 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். டேரில் மிட்சல் 32 பந்துகளில் 1 சிக்ஸர் 7 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த ருதுராஜ் மற்றும் சிவம் துபே ஜோடி 35 பந்தில் 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ருதுராஜ் 54 பந்தில் 3 சிக்ஸர்கள் 10 பவுண்டரிகளுடன் 98 ரன்கள் எடுத்தார்.

இறுதிவரை ஆட்டம் இழக்காத 20 பந்தில் 4 சிக்ஸர் 1 பவுண்டரி உடன் 39 ரன்கள், டோனி 2 பந்தில் 1 பவுண்டரி உடன் 5 ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் சிஎஸ்கே அணி மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 212 ரன்கள் குவித்தது. புவனேஸ்வர் குமார், உனட்கட், நடராஜன் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

பனிப்பொழிவிலும் கலக்கிய சிஎஸ்கே

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணிக்கு ஆபத்தான துவக்க ஆட்டக்காரர்கள் ஹெட் 13(7), அபிஷேக் ஷர்மா 15(9) சொற்ப ரன்னில் வெளியேறினார்கள். இதற்கு அடுத்து வந்த அன்மோல்ப்ரீத் சிங் முதல் பந்தில் ஆட்டம் இழந்தார். இந்த மூன்று விக்கெட்டுகளையும் துஷார் தேஷ்பாண்டே வீழ்த்தினார். இதற்கு அடுத்து 15(15), மார்க்ரம் 32(26) என வெளியேற ஹைதராபாத் நெருக்கடிக்கு உள்ளானது.

- Advertisement -

கிளாசன் மற்றும் அப்துல் சமாத் ஜோடி சேர கடைசி ஐந்து ஓவர்களில் வெற்றிக்கு 104 ரன்கள் தேவைப்பட்டது. தடுமாறிய கிளாஸ் 21 பந்தில் 20 ரன், அப்துல் சமாத் 18(19 ரன் ஆட்டம் இழந்தார்கள். தொடர்ந்து ஷாபாஷ் அகமத் 7(5), கம்மின்ஸ் 5(7), உனட்கட் 1(2), புவனேஸ்வர் குமார் 4*(3) ரன்கள் எடுக்க, ஹைதராபாத் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிஎஸ்கே 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துஷார் தேஷ்பாண்டே 4, முஸ்தாஃபிசூர் ரஹமான் மற்றும் பத்திரனா தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதையும் படிங்க : சாதனை தேவையில்ல.. சுயநலமே இல்லாத ருதுராஜ்.. சிவம் துபேவுக்கு களத்தில் செய்த காரியம்

இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி மூன்று இடங்கள் புள்ளி பட்டியலில் முன்னேறி பத்து புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா முதல் இரண்டு இடங்களிலும், ஹைதராபாத் நான்காவது இடத்திலும் இருக்கிறது.