பாப் டூ பிளசிஸ் பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சி.எஸ்.கே நிர்வாகம் – ரசிகர்கள் மகிழ்ச்சி

0
208
Faf du Plessis and CSK Management

அடுத்த வருட ஐபிஎல் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வீரர்களை தக்க வைத்துள்ளது. 16 கோடி ரூபாய்க்கு ரவீந்திர ஜடேஜா 12 கோடி ரூபாய்க்கு மகேந்திர சிங் தோனி 8 கோடி ரூபாய்க்கு மொயின் அலி மற்றும் 6 கோடி ரூபாய்க்கு ருத்துராஜ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தின் மூலமாக தக்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நான்கு வீரர்களைத் தவிர மற்ற அனைத்து சென்னை அணியின் வீரர்கள் மெகா ஏலத்தில் கலந்து கொள்வார்கள்.

சென்னை அணியில் விளையாடிய பழைய வீரர்களை மீண்டும் மெகா ஏலத்தில் வாங்க அனைத்து கட்ட நடவடிக்கை யும் முயற்சியும் கட்டாயமாக எடுப்போம் என்று தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக அந்த வீரர்களில் ஃபப் டு பிளசிஸ்சை வாங்குவதே எங்களுடைய முதல் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சக்கை போடு போட்ட ஃபேப் டு பிளேசிஸ்

இந்த அடிப்படையில் 16 இன்னிங்சில் 6 அரை சதம் குவித்து மொத்தமாக 633 ரன்களைக் குவித்தார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவரது பேட்டிங் ஆவெரேஜ் 45.21 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 138.21 ஆக இருந்தது. குறிப்பாக இறுதி போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக 59 பந்துகளில் 86 ரன்கள் குவித்து சென்னை அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய அடித்தளம் அமைத்தார்.

சீனியர் வீரரான இவர் பேட்டிங்கில் எந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் விளையாடுகிறாரோ அந்த அளவுக்கு பீல்டிங்கில் தனது அபாரமான பீல்டிங் திறமையை சென்னை அணிக்காக வெளிப்படுத்துவார்.எதிரணி வீரர்கள் அடிக்கும் ரன்களை தனது தனது பீல்டிங் திறமையால் அவர்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவார்.

சென்னை அணியின் சிஇஓ மற்ற அனைத்து வீரர்களையும் நிச்சயமாக மறுபடியும் அங்கு முயற்சிப்போம் அதிலும் குறிப்பாக இவரை முதலிலேயே வாங்க அனைத்து முயற்சிகளையும் கையில் எடுப்போம் என்று கூறியது சென்னை அணியின் ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

- Advertisement -