சி.எஸ்.கே அட்மினின் சேட்டை மேக்ஸ்வெல்லை சி.எஸ்.கே அணியில் எடுக்காததர்கான காரணம் இதோ

0
492
CSK Tweet

ஐ.பி.எல் 14 வது சீசனுக்கான ஏலம் நேற்று சென்னையில் நடைப்பெற்றது. ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வெல்லை ஏலத்தில் எடுக்க சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி. அணிக்களுக்கு இடையே பலத்த போட்டி நடைப்பெற்றது. இவர்களது போட்டியில் ஏலத்தின் தொகை பெட்ரோல் விலையை போல கிடு கிடுவென உயர்ந்தது.


ஏலத்தின் தொகை 14.25 கோடி வரவும் சி.எஸ்.கே ஏலத்தில் இருந்து பின்வாங்கியது. இறுதியில் 14.25 கோடி ரூபாய்க்கு ஆர்.சி.பி அணி அவரை வாங்கியது. மேக்ஸ்வெல்லின் துவக்க விலை 2 கோடி . கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய் வரை விலையை ஏற்றி ஏலத்தில் இருந்து சி.எஸ்.கே பின்வாங்கவே 12 கோடி அதிகமாக கொடுத்து ஆர்.சி.பி அணி அவரை வாங்கியது. சி.எஸ்.கே வின் இந்த செயலை நோட்டமிட்ட மீம்கிரியேட்டர்கள் மீம்ஸ்களை தெரிக்கவிட்டு வருகின்றனர்.


சி.எஸ்.கே ட்விட்டரில் ஒரு ரசிகர் ENGA THALA DHONI KU PERIYA WHISTLE ADINGA என்ற பக்கத்தில் வெளியான மீம்,அதில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் பிரகாஷ் ராஜ் தனுஷ் ஏலம் எடுப்பது போன்ற காட்சியை மையாமக்கிய மீம் ஒன்றை சி.எஸ்.கே அணியின் டிவிட்டரை மென்ஷன் செய்து ஒரு பதிவை பதிவேற்றினார்.

விலையை அதிகமாக்கிவிட்டு ஒன்றும் தெரியாதது போல தனுஷ் சென்று விடுவார் தனுஷை சி.எஸ்.கே என குறிப்பிட்டுள்ள இந்த மீம்மை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் டிவிட்டர் அட்மின் அந்த மீம்மை லைக் செய்து மீமில் வந்ததை உண்மையென உறுதி செய்துள்ளார் என நெட்டிசங்கள் கூறுகின்றனர்.