பெங்களூர் அணியின் புதிய கேப்டன் ஃபேப் டு பிளேசிஸ்சுக்கு வாழ்த்து தெரிவித்த சென்னை அணி

0
99
Faf du Plessis and MS Dhoni

2013ஆம் ஆண்டு உதல் கடந்தாண்டு வரை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கேப்டனாக விராட் கோலி பதவி வகித்து வந்தார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே இந்தாண்டு ஐபிஎல் தொடருடன், தனது கேப்டன்சி பொறுப்பை முடித்துக் கொள்வதாக விராட் கோலி முன்கூட்டியே தெரிவித்திருந்தார். எனினும் இனி வீரராக பெங்களூரு அணிக்கு கடைசிவரை விளையாடுவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த மெகா ஏலத்தில் பெங்களூரு அணி சிறந்த வீரர்களை தேர்வு செய்து கைப்பற்றி இருந்தது. அதில் முக்கியமாக முன்னாள் சென்னை வீரர் ஃபேப் டு பிளேசிஸ்சை 7 கோடி ரூபாய்க்கு தங்கள் அணிக்குள் வளைத்துப் போட்டுக் கொண்டது.

மெகா ஏலம் நடைபெற்று முடிந்த பின்னர் பல்வேறு ரசிகர்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் புதிய கேப்டன் ஃபேப் டு பிளேசிஸ் தான் என்று முன்கூட்டியே சமூக வலைதளங்களில் அடித்துக் கூறினார். அவர்களது கணிப்பின்படி ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் நேற்று ஃபேப் டு பிளேசிஸ்சை அந்த அணியின் புதிய கேப்டனாக அறிவித்துள்ளது.

பெங்களூரு அணி நிர்வாகத்திற்கு நன்றி கூறிய ஃபேப் டு பிளேசிஸ்

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு போன்ற ஒரு அணிக்கு கேப்டனாக பதவி ஏற்பது என்பது மிகப்பெரிய விஷயம் அது நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன். முந்தைய வருடங்களில் அந்த அணி பெற்ற வெற்றிகளை போன்று இனி வரும் நாட்களிலும் வெற்றி பயணத்தை தொடர வேலை நடைபெறப் போகிறது.

என்னை நம்பி இந்தப் பொறுப்பை ஒப்படைத்த பெங்களூரு அணி நிர்வாகத்திற்கும் பயிற்சியாளர் குழுவிற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் இந்த ஆண்டு அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அந்த (முதல் ஐபிஎல் கோப்பை) தருணத்தை பூர்த்தி செய்ய என்னால் முடிந்த பங்களிப்பை சிறப்பாக சரிவர செய்வேன் என்றும் நம்பிக்கை ஃபேப் டு பிளேசிஸ் தெரிவித்திருக்கிறார்.

ஃபேப் டு பிளேசிஸ்சுக்கு வாழ்த்து தெரிவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

நேற்று ஃபேப் டு பிளசிஸ் கேப்டன் பொறுப்பை ஏற்ற தருணத்தை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் தங்களுடைய இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்புச் செய்தனர். அந்த நேரடி ஒளிபரப்பில் பல்வேறு ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர். அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஒரு கமெண்ட் செய்தது. “எப்போதுமே நீங்கள் அற்புதமாக இருக்க வேண்டும் என்றும் எங்களுடைய அன்பு எப்போதும் உங்களுக்கு இருக்கும்” என்றும் கமெண்ட் செய்திருந்தது.

அதுமட்டுமின்றி ட்விட்டர் வலைதளத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அவர் சம்பந்தமாக நெகழ்ச்சியாக ஒரு டிவிட் செய்திருந்தது. “சென்னையில் இருந்து எங்கே சென்றாலும் உங்களுடைய பயணம் எப்போதும் சிறந்ததாக இருக்க விரும்புகிறோம். எங்களுடைய அன்பு எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும்” என்று பதிவு செய்திருந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இவ்வாறு கமெண்ட் செய்தது சென்னை ரசிகர்களை மட்டுமல்லாமல் பெங்களூரு அணி ரசிகர்களையும் நெகிழ்ச்சியடைய செய்தது குறிப்பிடத்தக்கது.