முதல் போட்டியில் சென்னை அணி எதிர்கொள்ளும் அணி இதுதான் – ஐ.பி.எல் அட்டவணை குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்தி

0
752
IPL 2022

இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி முடித்து உள்ளது. மூன்று போட்டிகளாக நடைபெற்ற இந்த தொடரில் மூன்று ஆட்டங்களையும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. புதிய கேப்டனாக ரோகித் பொறுப்பேற்ற பின்பு இது வரிசையாக இந்தியா வென்ற மூன்றாவது தொடராகும். அதிலும் குறிப்பாக மூன்று தொடர்களிலும் எதிர் அணியை இந்திய அணி ஒயிட்வாஷ் செய்துள்ளது. இதன் பிறகு அடுத்த டி20 போட்டியில் இந்திய அணி வரும் ஜூன் மாதம் தென் ஆப்பிரிக்க அணியை சந்திக்க உள்ளது.

டி20 தொடர் முடிந்து உள்ளதால் தற்போது ரசிகர்கள் ஐபிஎல் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர். வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடங்க உள்ளது. எட்டு அணிகளாக இல்லாமல் இந்த முறை 10 அணிகளுடன் ஐபிஎல் தொடர் விளையாடப்பட உள்ளது. ஏற்கனவே இருந்த எட்டு அணிகளுடன் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக இணைந்துள்ளன. இந்த தொடருக்கான ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி நடைபெற்றது. தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தின் மூலம் எடுத்து ஒவ்வொரு அணியும் அணியை கட்டமைத்து தொடருக்கு தயாராக உள்ளன.

- Advertisement -

கேப்டன் இல்லாத அணிகள் கேப்டனும் பயிற்சியாளர் இல்லாத அணிகள் பயிற்சியாளரையும் வரிசையாக அறிவித்து வருகின்றனர். இதனால் ரசிகர்களுக்கு தொடர்பு குறித்த சுவாரசியம் ஒவ்வொரு நாளும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. தற்போது இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் விளையாட போகும் அணிகளின் விவரத்தை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் விளையாடிய கொல்கத்தா மற்றும் சென்னை அணிகள் இந்த ஆண்டு முதல் போட்டியில் விளையாட உள்ளன.

மேலும் இந்த தொடர் முதல் அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஒளிபரப்பு ஒப்பந்தத்தை சோனி நிர்வாகம் கைப்பற்ற ஆர்வத்துடன் உள்ளது. சோனி நிர்வாகம் கைப்பற்றும் பட்சத்தில் மீண்டும் ஐபிஎல் ஆரம்ப காலம் போலவே சோனி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும். கடந்த ஆண்டு இறுதிப் போட்டிகள் அடைந்த தோல்விக்கு இந்த முறை கொல்கத்தா அணி சென்னை அணியை படி எடுத்து வெற்றியுடன் தொடங்குமா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.