விசுவாசி பிராவோ நீக்கம்; மொத்தம் 8 பேர் வெளியேற்றம் – இனிமே சிஎஸ்கே அணியில் இளம் பட்டாளம்!

0
3252

நட்சத்திர வீரர் பிராவோ உட்பட எட்டு பேரை வெளியேற்றியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. யார் யார் தக்கவைக்கப்பட்டிருக்கின்றனர்? யார் யார் வெளியேற்றப்பட்டுள்ளனர்? என்கிற பட்டியல் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் பங்கேற்பதற்கு முன்னர் ஒவ்வொரு அணியும் தங்களது அணியின் வீரர்களில் யாரை தக்க வைக்க வேண்டும்? யாரை வெளியேற்ற வேண்டும்? என முடிவு செய்து அதற்கான இறுதிப் பட்டியலை நவம்பர் 15ஆம் தேதி மாலைக்குள் ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

- Advertisement -

இதற்கான கால அவகாசம் முடிவடைந்திருக்கிறது. ஒவ்வொரு அணியும் ஒன்றன்பின் மற்றொன்றாக தக்கவைக்கப்பட்ட, வெளியேற்றபட்ட பட்டியல் மற்றும் வேறு அணியிலிருந்து டிரேட் செய்யபட்ட வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னை அணி தக்கவைத்த மற்றும் வெளியேற்றியுள்ள வீரர்களின் விபரங்கள் தெரியவந்துள்ளது. சென்னை அணியுடன் 2010 ஆண்டிலிருந்து பயணித்து வரும் பிராவோ இம்முறை வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அதேபோல் மற்றொரு மூத்த வீரர் உத்தப்பாவும் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இவர்கள் உட்பட மொத்தம் எட்டு வீரர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர்.

இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 20.25 கோடி கைவசம் இருக்கிறது. மேலும் 2 வெளிநாட்டு வீரர்களின் இடமும் காலியாக இருக்கிறது.

- Advertisement -

சிஎஸ்கே அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள் :

டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், கிறிஸ் ஜோர்டான், பகத் வர்மா, கே.எம்.ஆசிப், நாராயண் ஜெகதீசன்

சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:

எம்எஸ் தோனி, அம்பதி ராயுடு, ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, எஸ் சேனாபதி, ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, மிட்செல் சான்ட்னர், டுவைன் பிரிட்டோரியஸ், ஷிவம் துபே, ஆர் ஹங்கர்கேகர், தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, துஷார் தேஷ்பாண்டே , பிரசாந்த் சோலங்கி