கடந்த ஆண்டில் இருந்த ஒரு விஷயம் இந்த ஆண்டு சென்னை அணியில் இல்லை – மனம் திறந்து உண்மையை ஒத்துக்கொண்ட ருத்ராஜ் மற்றும் கான்வே

0
699

கடந்த ஆண்டு சென்னை அணி கோப்பையை வெல்ல மிக முக்கிய காரணமாக விளங்கிய ஓபனிங் வீரர் ருத்ராஜ் நடப்பு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 368 ரன்கள் மட்டுமே குவித்திருக்கிறார். கடந்த ஆண்டு ருத்ராஜ் மற்றும் ஃபேப் டு பிளேசிஸ் இருவரும் இணைந்து சிறப்பான அதிரடியான துவக்கத்தை ஒவ்வொரு போட்டியிலும் கொடுத்தனர்.

ஆனால் இந்த ஆண்டு அவ்வளவு சிறப்பான துவக்கம் சென்னை அணிக்கு கிடைக்கவில்லை. ருத்ராஜ் மற்றும் உத்தப்பா அதிகமான போட்டிகளில் ஓப்பனிங் விளையாடினார்கள். முத்தப்பா 230 ரன்கள் மட்டுமே குவித்தது குறிப்பிடத்தக்கது. இறுதியாக ருத்ராஜ் மற்றும் கான்வே ஒரு சில போட்டிகளில் மிக சிறப்பான துவக்கத்தை கொடுத்தாலும் அது கை கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். நடப்பு சீசனில் சென்னை அணியின் மோசமான ஃபார்ம் குறித்து ருத்ராஜ் மற்றும் கான்வே இருவரும் ஒரு சில விஷயங்களை தற்பொழுது பகிர்ந்து கொண்டுள்ளனர்.

- Advertisement -

ஓபனிங் வீரர்கள் ருத்ராஜ் மற்றும் கான்வே மனம் திறந்து பேசிய வார்த்தைகள் :

ஒரு சில ரசிகர்கள் கூறுவது போல இந்த ஆண்டு எங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை அல்லது எங்கள் வழியில் விஷயங்கள் நடக்கவில்லை என்றெல்லாம் ஒன்றுமில்லை. உண்மையைச் சொல்லப் போனால் நாங்கள் எதிர்பார்த்த நாங்கள் திட்டமிட்ட படி நாங்கள் விளையாடவில்லை. அதன் காரணமாகவே கடந்த ஆண்டை போல, நடப்பு சீசனில் எங்களால் சிறப்பாக விளையாட முடியவில்லை.

இதை ஏற்றுக் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும். நீங்கள் (சிஎஸ்கே ரசிகர்கள்) எங்களுக்கு பின்னால் இருக்கின்றீர்கள். அடுத்த ஆண்டே இன்னும் பலமான அணியாக வந்து வெற்றிகளை உங்களுக்கு பரிசீலிப்போம் என்று ருத்ராஜ் கெய்க்வாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

நியூசிலாந்து அணி வைத்திருந்த ஓபனிங் வீரர் கான்வே, “எங்களுக்கு நன்றாக தெரியும் இந்த ஆண்டு எங்களுக்கான ஆண்டு இல்லை என்று. இதை நாங்கள் புரிந்து கொண்டு நகர்ந்து செல்ல வேண்டும். இந்த ஆண்டு நாங்கள் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை அடுத்த ஆண்டு மிகச் சிறப்பாக செயல்படுவோம். அடுத்த ஆண்டு விஷயங்கள் சிறப்பாக இருக்கும், என்று அவரும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.