இந்த வீரர் இல்லாதது தான் சென்னை அணியின் மோசமான பேட்டிங்கிற்கு காரணம் ; அடுத்து என்ன செய்ய வேண்டும் ? அறிவுரை வழங்கியுள்ள ரவி சாஸ்திரி

0
776
Ravi Shastri about CSK performance in IPL 2022

நடப்பு சாம்பியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சரியாக ஆடாமல் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. 14 போட்டிகளில் வெறும் 4இல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் முடித்துள்ளது. இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலம் முடிவில் சற்று பலவீனமான அணியாக தான் அனைவரும் மதிப்பிட்டனர். அதோடு சேர்த்து முக்கிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் வெளியேறியது சி.எஸ்.கே அணிக்கு பெறும் பின்னடைவு. இத்தனை ஆண்டுகள் சென்னை அணிக்காக அயராது உழைத்த சுரேஷ் ரெய்னாவை ஏலத்தில் வாங்க சென்னை நிர்வாகம் மறுத்தது. அது ரசிகர்களிடையே மிகுந்த வருத்தத்தை உண்டாக்கியது.

ஐபிஎல் கோப்பைக்கான ஓட்டத்தில் சென்னை அணி நீடிக்க வேண்டுமெனில் சுரேஷ் ரெய்னா போன்ற பேட்ஸ்மேனை தேடி அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அறிவுறுத்தியுள்ளார். மேலும், சென்னை அணியின் மோசமான பேட்டிங் குறித்தும் அவர் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “ தொடர்ச்சியாக இத்தனை ஆண்டுகள் சென்னை அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் பலர் சுரேஷ் ரெய்னாவின் பங்களிப்பை மறந்து விடுகின்றனர். நம்பர் 3இல் அவர் நிலைத்து நின்று ஆடுவதால் அடுத்து வரும் பேட்ஸ்மேன்களுக்கு ரன்கள் சேர்க்க சுலபமாக இருக்கும். ஆகையால் சென்னை அணி அவரைப் போன்ற ஆட்டக்காரரை தேட வேண்டும். ” என்றார்.

- Advertisement -

சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறாத இரு ஆண்டும் சுரேஷ் ரெய்னா பங்கேற்கவில்லை. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி சுரேஷ் ரெய்னா போன்ற ஒரு வீரரை மிஸ் செய்தததை யாராலும் மறுக்க முடியாது. சென்ற ஆண்டு சென்னை அணியில் ரெய்னா இருந்த போதும் மொயின் அணி நம்பர் 3இல் சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தார். அதனால் பேட்டிங் ஆர்டரில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. இம்முறை எந்த வீரரும் நிலைத்து ஆடவில்லை. அதுமட்டுமில்லாமல் ஆல்ரவுண்டர் ஜடேஜா நல்ல ஃபார்மில் இல்லை. மேலும், காயம் காரணமாக பாதியிலேயே அவர் வெளியேறினார். அடுத்த ஆண்டு இத்தகு பிரச்சனைகள் இல்லாமல் விளையாடி சென்னை அணி 5வது முறை கோப்பையை முத்தமிடும் என நம்புவோம்.