சி.எஸ்.கே அணிக்காக இன்னும் ஏன் ராஷ்வர்தன் ஹங்கரேக்கர் களமிறங்கவில்லை ? – பதிலளிக்கும் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்

0
1522
Stephen Fleming about Rajvardhan Hangarekar

இந்தியன் பிரீமியர் லீக்கின் ஆண்டைகளான சென்னை மற்றும் மும்பை, இம்முறை மோசமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி கடைசி இடங்களில் பரிதவுக்கிறது. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றிக் கண்டுள்ளது. சீசன் தொடங்குவதற்கு முன்பே எம்.எஸ்.தோனி தன் கேப்டன் பதவியை ஜடேஜாவிடம் ஒப்படைத்து விட்டு விலகினார். ஜடேஜா கேப்டன் பொடுப்பைப் பெற்றப் பின்பு அவர் பழைய ஜடேஜாவைப் போல காணப்படவில்லை.

பேட்டிங், பவுலிங் இரண்டிலும் பெரிதாக சோபிக்கவில்லை. ஜடேஜா என்றாலே பீல்டிங் தான். அப்படிப்பட்ட அதிரடி பீல்டர் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 2 சுலபமான கேட்ச்களை தவறவிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இது அனைத்திற்கும் கேப்டன் பதவியும் ஓர் காரணம். தலைவராக அவர் எடுத்த முடிவுகளும் அணிக்கு சாதகமாக அமையவில்லை.

- Advertisement -

இதனால் ரசிகர்கள் மட்டுமில்லாமல் தொலைக்காட்சி டீ.ஆர்.பியும் பாதிக்கப்பட்டுள்ளது. என்னதான் இந்த ஆண்டு சென்னை அணிக்கு மோசமாக அமைந்தாலும் ஒரு சில இளம் வீர்ரகள் புதியதாக அறிமுகமாகி அசத்தினர். தொடக்கத்தில் சொதப்பிய முக்கேஷ் சவுத்திரிக்கு தொடர்ந்து அணியில் இடம் கொடுத்து அவரின் ஆட்டத்தை சென்னை அணி மேம்படுத்தியது. அதற்கு அவர்களுக்கு நிச்சயம் பாராட்டுகள் வழங்கப்பட வேண்டும்.

இருப்பினும், யு – 19 ஸ்டார் ஹங்கேரேக்கரை இன்னும் ஏன் பிளேயிங் லெவனில் சேர்க்கவில்லை என்று ரசிகர்கள் புலம்புகின்றனர். இது குறித்து தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் மௌனம் கலைத்துள்ளார். அவர் கூறியதாவது, “ ஹங்கேரேக்கர் யு – 19 கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடினார் என்பதை நான் நன்கு அறிந்துள்ளேன். இருப்பினும் இது சற்று பெரிய படி. இளம் திறமைசாலிகளை பொறுத்தவரை நாம் கவனமாக இருக்க வேண்டும். ஐபிஎல் போன்ற பெரிய தொடரில், சிறப்பாக செயல்பட போதுமான திறனை ஹங்கேரேக்கர் மேம்படுத்த நாங்கள் உதவுவோம். அதற்கு முன் வீணாக அணியில் சேர்த்து அவரின் பெயரை சேதப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. ” என்றார்.

மேலும் இந்த வருடம் ஹங்கேரேக்கர் விளையாடுவார் மாட்டாரா என்பது குறித்தும் அவர் பேசியுள்ளார். அதாவது, “ இந்த இளம் வீரர் ஏற்கனவே ஒரு சில பெரிய போட்டிகளில் களமிறங்கியுள்ளார். ஒருவேளை அவர் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயம் நாங்கள் ஆட வைப்போம். வேகம் ஒரு பக்கம் இருந்தாலும், அதை எப்படி ஐபிஎல் போன்ற பெரிய தொடரில் வெளிக் காட்டுகிறோம் என்பது தான் முக்கியம். அவரின் விஷயதில் நாங்கள் ஜாகர்தியாக இருக்க விரும்புகிறோம். ” என்றும் கூறினார் ஸ்டீபன் பிளெமிங்.

- Advertisement -