இந்த ஆண்டுடன் மகேந்திர சிங் தோனி விலகிக் கொள்வாரா ? – தோனியின் ஓய்வு பற்றி பேசியுள்ள காசி விஸ்வநாதன்

0
176
CSK CEO about MS Dhoni

2008ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மகேந்திர சிங் தோனி கேப்டனாக தலைமை தாங்கி வந்தார். இந்நிலையில் இன்று மாலை நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சமூகவலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டது.

அந்த அறிவிப்பில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் ரவீந்திர ஜடேஜா சென்னை அணியை தலைமை தாங்க போகிறார் என்றும் மகேந்திரசிங் தோனி தனது கேப்டன் பதவியை ஜடேஜாவுக்கு விட்டுக்கொடுத்து விட்டதாகவும் குறிப்பிட்டு கூறியிருந்தனர். இதனையடுத்து இனி சென்னை அணியை ரவிந்திர ஜடேஜா கேப்டனாக தலைமை தாங்க போகிறார்.

- Advertisement -
சென்னை அணி நிர்வாகத்தின் சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம்

மகேந்திர சிங் தோனி தன்னுடைய கேப்டன் பதவியை ஜடேஜாவுக்கு விட்டுக் கொடுத்திருப்பது அவருடைய சொந்த முடிவு. அணியின் தேவை மற்றும் அணியின் நலன் குறித்து எப்பொழுதும் மகேந்திரசிங் தோனி யோசித்துக் கொண்டே இருப்பார். நிச்சயமாக இந்த முடிவை அவர் அணியின் நலம் குறித்து தான் எடுத்திருப்பார் அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை என்று காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.

மேலும் பேசிய காசி விஸ்வநாதன், தோனி நிச்சயமாக இந்த ஆண்டுடன் ஓய்வு பெற மாட்டார்.புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா மற்றும் மற்ற அணி வீரர்களை அவர் வழிநடத்துவார். நிச்சயமாக இனி வரும் ஆண்டுகளில் அவர் தன்னுடைய பணியை சென்னை அணிக்கு செய்வார் என்றும், மகேந்திர சிங் தோனியின் முடிவை எப்பொழுதும் நாங்கள் மதிக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு தன்னுடைய ஓய்வு பற்றி பேசியிருந்த மகேந்திர சிங் தோனி

கடந்தாண்டு மகேந்திர சிங் தோனிக்கு நடந்த பாராட்டு விழாவில் கூட மகேந்திரசிங் தோனி தன்னுடைய ஓய்வு குறித்து பேசி இருந்தார். தன்னுடைய ஃபார்ம் குறித்து தான் ஓய்வு முடிவு எடுக்கப்படும். எனவே எனது ஓய்வு முடிவு எப்போது வேண்டுமானாலும் எடுக்கப்படலாம். அது இப்போதும் எடுக்கலாம் அல்லது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கலாம் என்று தோனி அவ்வாறு பேசி இருந்தார்.

- Advertisement -

இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கையில் மகேந்திர சிங் தோனி இன்னும் ஒரு சில ஆண்டுகள் சென்னை அணியில் வீரராக விளையாடுவார் என்றும், புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா மற்றும் மற்ற அணி வீரர்கள் அனைவரையும் அவர் சிறப்பாக வழிநடத்துவார் என்று நாம் உறுதியாக நம்பலாம்.