தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியது பற்றியும் புதிய கேப்டன் ஜடேஜா குறித்தும் சி.எஸ்.கே சிஇஓ காசி விசுவநாதன் பேச்சு

0
52
CSK CEO Kasi Vishwanathan about Dhoni Captaincy

ஜடேஜாவிற்கு இதுவரை பெரியளவில் கேப்டன்சி அனுபவம் கிடையாது.

அதனால் தான் ஆடும் காலத்தில், களத்திற்குள் வைத்தே கேப்டன்சி அனுபவத்தை அவருக்கு உருவாக்க, தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகியிருக்கிறார்.

ஏலத்திற்கு முன்பு, மூன்றுபேரைத்தான் தக்க வைக்க வேண்டுமென்று விதிமுறை வந்தால், தன்னைத் தக்க வைக்க வேண்டாமென்றும், ஏலத்தில் விட்டு எடுக்குமாறும், இல்லையென்றால் ஓய்வு பெறுவதில் பிரச்சினை இல்லையென்றும் தோனி கூறியிருந்ததாய் செய்திகள் அப்போதே வந்தது.

இதற்கு சி.எஸ்.கே நிர்வாகம் மறுத்ததோடு, அவரை முதல் வீரராக தக்க வைப்போம், அவர்தான் கேப்டன் என்று அறிவித்திருந்தது. ஆனால் தோனி ருதுராஜின் இடத்தில் தக்க வைக்க கேட்டும் சி.எஸ்.கே நிர்வாகம் மறுத்து, இரண்டாவது வீரராய் தக்க வைத்தது.

இவ்வளவு ஏன், குஜராத்திற்குப் பயிற்சிக்கு போனதுவரை தோனியின் முடிவுதான். ஏலத்திற்கு முன்பாக சென்னை வந்து ஆலோசனைகளிலும் ஈடுபட்டிருந்தார்.

இப்போது சி.எஸ்.கே அணியின் சி.இ.ஓ கூறும்போது ” எம்.எஸ்.தோனி எடுக்கும் எந்த முடிவுகளும் அணியின் நலனுக்காகவே இருக்கும். இன்று அவர் எடுத்திருக்கும் முடிவுக்கும் சில காரணங்கள் இருக்கும். ஜடேஜாவிற்கு பின்னால் இருந்து வழிநடத்தும் சக்தியாக அவர் இருப்பார். அவரது இந்த முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். கடந்த காலங்களைப் போலவே எல்லாம் சீராகவே போகும் என்று நம்புகிறோம். ” என்று கூறியிருக்கிறார்!

இது சி.எஸ்.கே அணியின் எதிர்கால நலனுக்காக மகேந்திர சிங் தோனி எடுத்த தனிப்பட்ட முடிவு. இதற்குப் பின்னால் வேறு காரணங்களோ, அழுத்தமோ இல்லையென்பதுதான் உண்மை!

சி.எஸ்.கே அணிக்கு அவர் எப்போதும் ராஜாதான்!