தொடர் 4 தோல்விகள் – விரக்த்தியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ஜடேஜா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பதிவு

0
70
Ravindra Jadeja CSK Captain

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளையும் மிக எளிதாக வீழ்த்தி தொடரின் ஆரம்பம் முதல் இறுதி வரை மிக சிறப்பாக விளையாடி இறுதியில் கோப்பையையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ரவீந்திர ஜடேஜா தலைமை தாங்கி வருகிறார்.

இதுநாள் வரையில் மகேந்திர சிங் தோனி தலைமையில் விளையாடி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக இந்த ஆண்டு முதல் ரவீந்திர ஜடேஜா தலைமையில் தற்போது விளையாடிக் கொண்டிருக்கிறது. ரவிந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்கு போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது.

தொடர் தோல்விகளை பெற்றுவரும் சென்னை சூப்பர் கிங்ஸ்

எந்த ஒரு ஐபிஎல் தொடரிலும் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் 4 போட்டிகளில் தோல்வி பெற்றதே கிடையாது. முதல் முறையாக இந்த தர்மசங்கட நிலைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆளாகியுள்ளது.

கொல்கத்தா பஞ்சாப் லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக நடந்த நான்கு போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக எளிதான முறையிலேயே வீழ்த்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக சென்னை அணியின் ரசிகர்கள் அனைவரும் தற்போது சோகத்தில் உள்ளனர்.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் ரவீந்திர ஜடேஜா தற்போது நடக்கும் விஷயங்களை தன் மூலையில் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது. தோல்விகளை குறித்து யோசிக்காமல் இனி அடுத்த போட்டிகளில் வெற்றி பெறுவது எப்படி என்கிற நோக்கத்திலேயே யோசிக்க வேண்டும். தற்பொழுது அவர் தன்னுடைய மனதை சந்தோசமான நிலையில் வைத்து கொள்ள வேண்டும். அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி கிடைக்கும் அளவிற்கு அவர் தயாராக வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளார்.

இன்ஸ்டகிரம் வலைதளத்தில் தன்னம்பிக்கை நிறைந்த புகைப்படத்தை ஸ்டோரியாக வைத்த ஜடேஜா

இன்று ரவீந்திர ஜடேஜா அதனுடைய இன்ஸ்டகிரம் வலைதளத்தில் சில நிமிடங்களுக்கு முன்னர் ஒரு ஸ்டோரியை பதிவு செய்தார். தன்னம்பிக்கை நிறைந்த வார்த்தைகள் கொண்ட புகைப்படத்தை அவர் தன்னுடைய ஸ்டோரியில் பதிவிட்டார். அந்த புகைப்படத்தில் “இன்று நீங்கள் இருக்கும் போராட்ட நிலை, நாளை உங்கள் வாழ்க்கைக்கு தேவையான பலத்தை உருவாக்குகிறது” என்று அதில் தன்னம்பிக்கை நிறைந்த வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தது.

ரவிந்திர ஜடேஜா நல்ல மன தைரியத்துடன் தற்போது இருப்பது இந்த ஒரு ஸ்டோரி மூலமாக நமக்கு தெரிய வந்துள்ளது. இனி அடுத்தடுத்த போட்டிகளில் அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் வெற்றிகளைப் பெறும் என்று நாம் அனைவரும் நம்புவோம். சென்னை அணி அதனுடைய அடுத்த போட்டியில் பெங்களூர் அணியை வருகிற 12-ஆம் தேதி அன்று சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.